*வாழ்க்கை*
“இறக்கை சிலுப்பும் காக்கையை…
எச்சில்
இலையைத் தின்றபடி
யோசனை
செய்யும் பசுமாட்டை…
நனைந்த
குரலில் பூ விற்று
நடந்து
போகும் சிறு பெண்ணை…
ஓட்டல்
புகையை ரோட்டின்மேல்
பெட்ரோல்
சிதறிய கோலத்தை
பாராமல்
ஏன் அவன் மட்டும்
பரிசு
சீட்டை விலை சொல்லிக்
கூவுகின்றான்?
என்
கக்கத்துக்குடையைப் போல
பெரிதாகக் கிழிந்து போச்சோ
அவன்
வாழ்க்கை..!”
*கல்யாண்ஜி*
No comments:
Post a Comment