*அறைவனம்*
“பிறகு விசாரித்தபோது
தெரியவந்தது:
‘அது கானகப் பறவையாம்
அடிக்கடி
தென்படாதாம்
அபூர்வமாம்.’
எப்படியோ
அறைக்குள்
வந்து சிறகு விரித்தது.
அலமாரியில்
தொற்றி
அது
யோசித்த போது
புத்தகங்கள்
மக்கி மரங்கள் தழைத்தன.
நீர்ப்பானை
மேல் அமர்ந்து
சிறகு
உலர்த்தியபோது
ஊற்றுப்
பெருகி காட்டாறு புரண்டது.
ஜன்னல்
திட்டில் இறங்கி
தத்தியபோது
சுவர்கள்
கரைந்து காற்றுவெளி படர்ந்தது.
நேர்க்கோடாய்
எம்பிக்
கொத்தியபோது
கூரையுதிர்த்து
வானம் விரிந்தது.
அறையைப்
பறவை
அந்நியமாய்
உணர்ந்ததோ
பறவையை
அறை
ஆக்கிரமிப்பாய்
நினைத்ததோ?
என்னவோ
நடந்த ஏதோ நொடியில்
வந்த
வழியே பறந்தது பறவை.
அது
திரும்பிய
வழியே திரும்பிப் போனது
அதுவரை
அறைக்குள்
வாழ்ந்த
கானகம்..!”
*சுகுமாரன்*
#ஆசிரியர் குறிப்பு#
ReplyDelete*கவிஞர் நா.சுகுமாரன்*
(பிறப்பு: ஜூன் 11, 1957;
கோவை, தமிழ்நாடு)
ஒரு தமிழ்க் கவிஞர் ஆவார்.
கவிதை, மொழிபெயர்ப்பு,
விமர்சனம், இதழியல்,
தொலைக்காட்சியின்
செய்தி ஆசிரியர்
எனப் பல்வேறு
பரிமாணங்களில் இவர்
இயங்கிக்கொண்டிருக்கிறார்.
சென்னை பல்கலைக்கழகத்தில்
பி.எஸ்.ஸி பட்டம் பெற்ற
சுகுமாரன்,
அடூர் கோபாலகிருஷ்ணனின்
சினிமா பற்றிய
புத்தகமொன்றை
(சினிமா அனுபவம்) தமிழில்
மொழிபெயர்த்திருக்கிறார்.
'காலச்சுவடு' பத்திரிகையின்
பொறுப்பாசிரியராகப்
பணியாற்றுகிறார்.
இவர் எழுதிய
கவிதைத் தொகுப்புகள் :
கோடைக்காலக் குறிப்புகள்(1985)
பயணியின் சங்கீதங்கள் (1991)
சிலைகளின் காலம்(2000)
வாழ்நிலம் (2002)
பூமியை வாசிக்கும் சிறுமி (2007)
கட்டுரைகள் :
திசைகளும் தடங்களும் (2003)
தனிமையின் வழி ( 2007)
இழந்த பின்னும் இருக்கும்
உலகம் (2008)
வெளிச்சம் தனிமையானது (2008)
👏👏👌🏻👌🏻
ReplyDeleteஅருமை
ReplyDelete❤️
ReplyDeleteமிக அருமை.
ReplyDelete🙏
ReplyDelete👌👌
ReplyDelete