எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Monday, 16 May 2022

படித்ததில் பிடித்தவை (“ஸ்ரீவித்யா பாட்டு பாடுகிறாள்” – அழகியசிங்கர் கவிதை)

 


*ஸ்ரீவித்யா பாட்டு பாடுகிறாள்*

 

எல்லோரும் சமையல் செய்கிறார்கள்.

இந்த வீட்டில் ஸ்ரீவித்யா

பாட்டுப்பாடிச் சமையல் செய்கிறாள்.

சாம்பாருக்கும் ரசத்திற்கும் தெரியுமா?

அவள் பாட்டுப் பாடுகிறாளென்று.

 

பேத்தி வீரிட்டுக் கத்துகிறாள்.

அவள் ஓடிப்போய் சமாதானம் செய்கிறாள்.

அடுத்த அறையில்

கணவன் போனில் பேசிக்கொண்டிருக்கிறான்.

அவளுக்குப் புரியவில்லை

அவன் என்ன பேசுகிறானென்று.

 

ஸ்ரீவித்யா பாட்டுப்பாடியபடி

சமையல் செய்து கொண்டிருக்கிறாள்.

தட்டில் சாதத்தை வைக்கும்போதுதான்

சாம்பாரில் ரசத்தில் உப்பு இருக்கிறதா என்று

தெரியும்.

ஏனென்றால் அவை அவளுடைய பாட்டைக்

கேட்பதில்லை..!

 

*அழகியசிங்கர்*



No comments:

Post a Comment