*தூரிகை*
“என்மன உணர்வை
எழுதிய
கோலத்திற்குத்தான்
நவீன
ஓவியமா?
நான்
உடுத்திக்கொள்ளும்
என்குணமா?
என்னில்
அடங்கியக் கனவை
கொட்டி
அழகு பார்க்கும்
வண்ணக்குளமா?
எனக்குள்
உதிர்ந்த வண்ணத்துப்பூச்சியின்
சிறகுகளா?
என்னைபோல்
பலவடிவம்
எடுக்கும்
அவதாரியா?
விழி
வினாக்களுக்கு
விடைதெரியாமல்
ஒரு
கேள்விக்குறியாய்
தொடர்கிறது
நானும்
நவீன ஓவியமுமாய்..!”
*செ.புனிதஜோதி*
அருமையான சிந்தனையும் கவிதை வடிவும்.
ReplyDeleteசூப்பர் தூரிகையும் எண்ணோட்டமும்
ReplyDeleteஅருமை அருமை
ReplyDelete👏👌
ReplyDelete👍
ReplyDeleteஒவ்வொரு
ReplyDeleteதனிமனிதனும்
புரியாத புதிர் தான்!