*கருநாவல் பழம்*
“வெளிக்கதவு திறந்து
உள்கதவைத்
திறந்து
அறைக்கதவைத்
திறந்து
பீரோ
திறந்து
ரகசியச்
சிற்றறை திறந்து
பெட்டியை
எடுத்தேன்
மணம்
வீசிக்கொண்டிருக்கிறது
கருநாவல்
பழம் ஒன்று
பிசுபிசுவென்று.
கபாடபுரத்தின்
சுடுகாட்டு
மரத்தில்
பறிக்கையில்
ஒட்டிய
தூசு தும்பட்டையுடன்..!”
*தேவதச்சன்*
#ஆசிரியர் குறிப்பு#
ReplyDeleteதேவதச்சன்
(பிறப்பு: 1952) என்ற
புனைபெயரில் அறியப்படும்
தமிழ்க் கவிஞரின் இயற்பெயர்
எஸ்.ஆறுமுகம் ஆகும்.
இவர் தூத்துக்குடி மாவட்டம்,
கோவில்பட்டியில் 1952-ல்
பிறந்தவர் ஆவார்.
இவர் தமிழில்
மிகச் சிறந்த
நவீன கவிஞர் ஆவார்.
தமிழ் நவீன இலக்கிய
வரலாற்றில், 1970-களில்
வந்த கசடதபற, ழ
இதழ்களில் எழுதத்
தொடங்கினார்.
அயல்நாட்டிலிருந்து தரப்படும்
இலக்கியத்திற்கான “விளக்கு”
விருது பெற்றவர்.
தமிழ் நாட்டில் வழங்கப்படும்
“விஷ்ணுபுரம்” விருது (2015)
பெற்றவர்.
👌
ReplyDeleteபெட்டியில் இல்லையெனினும்
ReplyDeleteபழைய ஞாபகங்கள் வருடத்தான்
செய்கிறது.
அழகான வர்ணனை.
ReplyDeleteகருநாவலும் அருமை. கவிதையும் அருமை.
ReplyDelete🙏
ReplyDelete