*காகங்கள் வந்த வெயில்*
“சிறுமி விமலா இறந்துவிட்டாள்.
எப்போதும்
சத்தமிடும் விரல் அகலக்குருவிகள்
ஏனோ
இன்று வரவில்லை.
செவலைப்பூனை
மரணத்தை
ஏற்கனவே அறிந்திருந்தது போல்
கண்களை
திறந்து மூடியபடி
உலகுக்கு
துக்கத்தை கையளித்துவிட்டு
படுத்துக்கிடந்தது.
நான்
உள்ளே வந்திருக்கக் கூடாது
திரும்பத்திரும்ப
சொன்னார்
விமலாவின்
அப்பா.
விமலாவின்
வீட்டில்
காகங்கள்
கரைந்துகொண்டிருந்தன.
பறிகொடுத்த
முகங்களுடன்
வெவ்வேறு
மூலைகளில் அமர்ந்திருந்தனர்
விமலாவின்
அம்மாவும் உறவினரும்.
வெயில்
விமலாவின்
மறைவை
வீடுகள்
தோறும் சொல்லிக்கொண்டிருந்தது..!”
*ஷங்கர்ராமசுப்ரமணியன்*
{“ஆயிரம் சந்தோஷ இலைகள்”
No comments:
Post a Comment