*தாழ்வாரம்*
“பணியிலிருந்து எப்போது
வீடு
திரும்பினாலும்
நீங்கள்
துக்கமாக இருப்பதாக
பிள்ளைகள்
புகார்
சொல்கிறார்கள்.
எவ்வளவுதான்
பட்டும்படாமலிருந்தும்
நாள்தோறும்
சிறுகசப்பு
தட்டிவிடுகிறது.
தோற்றத்தில்
திண்ணை முற்றம்
வாசல்
தோட்டமென
விசாலமாக
இருக்கிற மனதிற்கு
தாழ்வாரத்தைப்
பணிந்து
வாழத்தெரியவில்லை..!”
*கண்டராதித்தன்*
👏👏💐💐🙏🏻🙏🏻
ReplyDeleteஅருமை
ReplyDeleteஎல்லா பணி செய்யும்
ReplyDeleteமனிதர்களுக்கும் ஒரு
காலகட்டத்தில் ஏற்படும்
மனச்சோர்வை அழகாக
வடித்திருக்கிறார் கவிஞர்.
ஆக மிக சிறப்பு....👌👌
ReplyDeleteஅருமை.
ReplyDelete