*ஒருவரும் வரவேயில்லை*
“நகைக்கடைக்காரர் தான்
நினைவுபடுத்துகிறார்
அட்சய
திருதியையை...
ஜவுளிக்கடைக்காரர்
தான்
நினைவுபடுத்துகிறார்
தீபாவளி
வரப்போவதை...
அக்னி
நட்சத்திரம்
நாளை
தொடங்குவதைக்கூட
ஏசி
கடைக்காரரே
நினைவுபடுத்துகிறார்...
பெட்ரோல்
விலை ஏறியதை
மின்சார
வாகன விற்பனையாளர்
நினைவுபடுத்துகிறார்...
என்
வீட்டுக் கழிவறையில்
கிருமிகள்
சூழ்ந்திருப்பதைக்கூட
டாய்லெட்
கிளீனர் தயாரிப்பாளர்
நினைவுபடுத்துகிறார்...
நீண்ட
நேரமாக தேடிக்கொண்டிருக்கும்
டூ
வீலர் சாவியை
எங்கு
வைத்தேனென
நினைவுபடுத்தத்தான்
ஒருவரும்
வரவேயில்லை..!”
*வத்திராயிருப்பு தெ.சு.கவுதமன்*
😄
ReplyDeleteமிக அருமை.
ReplyDeleteஆதாயம் இல்லாமல்
எவரும், எதையும்
ஞாபகப்படுத்துவதில்லை.
👌👌
ReplyDelete👍🏻🙏👏👏👌🏻👌🏻
ReplyDelete👌👌👌😊
ReplyDelete🙂
ReplyDelete