*பிதுர்தோஷம் மாற*
“அப்பா படத்தில்
மாலையிட்டு
பாயாசம், பப்படம் சோறு எடுத்து
காக்கைக்கு
கொண்டு வைக்க
உள்
பயத்தோடு
பிகுசெய்து
போகும் காக்கை
பின்
கா…கா…சொல்லி
காகம்
வந்து சோறு தின்று போனபின்பு
பிள்ளைகள்
வந்து உண்ணும்
மறுநாள்
வரும் காக்கை
ஒரு
பிடி சோற்றுக்காய்
கா…கா…வென கரையும்
அப்பாவைப்
போல..!”
*தெறி ராஜ்குமார்*
No comments:
Post a Comment