*பேருந்து*
“மறந்து போய்
இறங்கி
விட்டார்.
கிளம்புகிறது
பேருந்து.
‘அங்கிள் நீங்க அவருக்கு
மீதி
சில்லரைக் கொடுக்கல…’
ஞாபகப்படுத்துகிறது
குழந்தை.
விசிலடிக்கிறார்.
நிற்கிறது
பேருந்து.
இறங்கியவர்
ஓடி வருகிறார்.
நடத்துனர்
சில்லரைக்
கொடுத்து
நன்றியை
வாங்கிக்கொள்கிறார்.
குழந்தை
புன்னகை.
தாய்
புன்னகை.
நடத்துனர்
புன்னகை.
ஒரு
புன்னகைச் சித்திரமாய் விரிய
போகிறது
பேருந்து..!”
*ராஜா சந்திரசேகர்*
#ஆசிரியர் குறிப்பு#
ReplyDelete*கவிஞர் ராஜா சந்திரசேகர்*
பிடித்த வாசகம்:
"என்னவும் செய்.
செய்வதில் நீ இரு."
ராஜா சந்திரசேகர் எழுதிய
கவிதைத்தொகுப்புகள்:
1. கைக்குள் பிரபஞ்சம்
2. என்னோடு நான்
(2003ஆம் ஆண்டுக்கான
கவிப்பேரரசு வைரமுத்துவின்
கவிஞர்கள் திருநாள் விருது
பெற்றது)
3. ஒற்றைக்கனவும்
அதைவிடாத நானும்
(2002ஆம் ஆண்டுக்கான
திருப்பூர் தமிழ்ச்சங்க விருது
பெற்றது)
4. அனுபவ சித்தனின்
குறிப்புகள்
5. நினைவுகளின் நகரம்
6. மீனுக்கு நீரெல்லாம்
பாதைகள்
7. மைக்ரோ பதிவுகள்
Superb.
ReplyDeleteகவிதை மிக அருமை.
ReplyDeleteநேர்மை நிறைந்த
ReplyDeleteமனிதர்களின் சூழல்
என்றும் மகிழ்வு தான்!
கவிதை அருமை.
ReplyDelete