*போரை நிறுத்துங்கள் புதின்*
“மில்லி மீட்டராய்
வளர்ந்த
உலகம்
மீட்டர்
மீட்டராய்ச் சரியும்
கரும்புகை
வான்
விழுங்கும்
பகலை
இருள்
குடிக்கும்
கடல்கள்
தீப்பிடிக்கும்
குண்டு
விழாத நாடுகளிலும்
ஏழைகளின்
மண்பானை
உடையும்
ஆயுதம்
மனிதனின்
நாகரிகம்;
போர்
அநாகரிகம்
போரை
நிறுத்துங்கள் புதின்..!”
*வைரமுத்து*
நாகரிக உலகத்தில்
ReplyDeleteமனிதனின் அருவருக்கத்தக்க
அநாகரிகம் போர்.
ஆயுதம் எப்படி மனிதனின் நாகரிகம் என்கிறார் எனத்தெரியவில்லை! மனிதனின் பரிணாம வளர்ச்சியின் ஒரு பகுதி ஆயுதம். கவிதை நடைக்காக எதையும் சொல்லுகிறார்.
ReplyDeleteகவிதை மிகவும் அருமை.
ReplyDelete