எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Saturday, 5 March 2022

படித்ததில் பிடித்தவை (“பொம்மையும் குழந்தையும்” – ராஜா சந்திரசேகர் கவிதை)

 


*பொம்மையும் குழந்தையும்*

 

குழந்தைக் கேட்ட

பொம்மை வாங்க

காசு இல்லை.

 

பொம்மை மறக்க

வழி நெடுக

கதை சொல்லிக்கொண்டே

வருகிறார் அப்பா.

 

உம் கொட்டுகிறது குழந்தை.

 

கதை முடிந்து

நிம்மதி பெருமூச்சு விட்டு

அப்பா கேட்கிறார்.

 

எப்பிடிம்மா கதை இருந்துது.

 

குழந்தை சொல்கிறது

 

அப்பா இந்த கதைய

அந்த பொம்மைக்குச் சொல்ல்லாமா

போய் வாங்கிட்டு வரலாமா..?

 

*ராஜா சந்திரசேகர்*




6 comments:

  1. #ஆசிரியர் குறிப்பு#

    *கவிஞர் ராஜா சந்திரசேகர்*

    பிடித்த வாசகம்:
    "என்னவும் செய்.
    செய்வதில் நீ இரு."

    ராஜா சந்திரசேகர் எழுதிய
    கவிதைத்தொகுப்புகள்:

    1. கைக்குள் பிரபஞ்சம்
    2. என்னோடு நான்
    (2003ஆம் ஆண்டுக்கான
    கவிப்பேரரசு வைரமுத்துவின்
    கவிஞர்கள் திருநாள் விருது
    பெற்றது)
    3. ஒற்றைக்கனவும்
    அதைவிடாத நானும்
    (2002ஆம் ஆண்டுக்கான
    திருப்பூர் தமிழ்ச்சங்க விருது
    பெற்றது)
    4. அனுபவ சித்தனின்
    குறிப்புகள்
    5. நினைவுகளின் நகரம்
    6. மீனுக்கு நீரெல்லாம்
    பாதைகள்
    7. மைக்ரோ பதிவுகள்

    ReplyDelete
  2. சத்தியன்5 March 2022 at 09:14

    கவிதை மிக அருமை.
    கவிஞருக்கு பாராட்டுகள்.

    ReplyDelete
  3. ஸ்ரீராம்5 March 2022 at 09:39

    குழந்தைகள் தாங்கள்
    விரும்பியதை பெற
    எப்போதும் வலுவாய்
    முயற்சிப்பவர்கள்..!

    ReplyDelete
  4. வெங்கட்ராமன், ஆம்பூர்5 March 2022 at 10:42

    வாழ்த்துகளும்,
    வணக்கமும்.

    ReplyDelete
  5. செல்லதுரை5 March 2022 at 10:42

    கவிதை மிக அருமை.

    ReplyDelete