*பிஸ்கட்*
“எப்போதும்
ஒரு
பிஸ்கட்டை இரண்டாகப் பிட்டு
என்
நாய்க்கு எறிவேன்.
அரை
பிஸ்கட்டிற்கு
முழு
உடலால் நன்றி செலுத்தும்
பிராணி
அது.
இரண்டு
முறைகள்
அந்த
நன்றியைக் கண்டுகளிப்பேன்.
இரு
முறையும்
அது
என்னைப் போற்றிப் பாடும்.
ஒவ்வொரு
முறையும்
என்
முகத்தை
அவ்வளவு
ஏக்கத்தோடு
பார்த்துக்
குழையும்.
இரண்டாம்
துண்டு என் இஷ்டம்.
இரண்டு
துண்டுகளுக்கிடையே
அதன்
நெஞ்சம்
அப்படிக்
கிடந்து தவிக்கும்.
உச்சியில்
இருக்கும் எதுவோ
இதைப்
பார்த்துக்கொண்டிருக்கிறது.
அதுதான்
என்
பிஸ்கட்டை
ஆயிரம்
துண்டுகள் ஆக்கிவைத்தது...!”
*இசை (எ) ஆ.சத்தியமூர்த்தி*
{‘உடைந்து எழும் நறுமணம்’ கவிதை நூலிலிருந்து.}
#ஆசிரியர் குறிப்பு#
ReplyDelete*இசை*
இயற்பெயர் சத்தியமூர்த்தி.
பிறப்பு : 1977.
பொது சுகாதாரத் துறையில்
பணி.
வசிப்பது கோவை மாவட்டம்
இருகூர்.
வெளிவந்திருக்கும் நூல்கள் :
1. காற்று கோதும்
வண்ணத்துப்பூச்சி (கவிதைகள்)
2. உறுமீன்களற்ற நதி
(கவிதைகள்)
3. சிவாஜிகணேசனின்
முத்தங்கள் (கவிதைகள்)
4. அதனினும் இனிது அறிவனர்
சேர்தல் (கட்டுரைகள்)
5. அந்தக் காலம் மலையேறிப்
போனது (கவிதைகள்)
6. லைட்டா பொறாமைப்படும்
கலைஞன் (கட்டுரைகள்)
7. ஆட்டுதி அமுதே (கவிதைகள்)
8. உய்யடா உய்யடா உய்
(கட்டுரைகள்)
9. பழைய யானைக் கடை
(கட்டுரைகள்)
10. வாழ்க்கைக்கு வெளியே
பேசுதல் (கவிதைகள்)
11. நாயகன் வில்லன் மற்றும்
குணச்சித்திரன் (கவிதைகள்)
12. தேனோடு மீன் (கட்டுரைகள்)
13. மாலை மலரும் நோய்
(கட்டுரைகள்)
14. உடைந்து எழும் நறுமணம்
(கவிதைகள்)
கவிதை மிக அருமை.
ReplyDeleteகவிதை அருமை.
ReplyDeleteகவிதை மிகவும் அருமை.
ReplyDeleteகவிதை அருமை.
ReplyDeleteகவிஞருக்கு பாராட்டுகள்.
ReplyDeleteகவிதை அருமை.