எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Sunday, 6 March 2022

*கடலை மிட்டாய் கசக்கிறது*

 


சென்னை மாநகர் செல்ல

சிக்னலுக்காக காத்திருக்கும்

கூட்டமா காலை ரயில்.

 

கடலை மிட்டாய் விற்கும்

கண் தெரியாதவர்

அடுத்தப் பெட்டிக்கு

செல்ல முடியாமல்

ஒரே பெட்டியில்

சென்று திரும்புகிறார்.

 

அவர் வந்து செல்லும்

போதெல்லாம்

வழிவிட சிரமப்பட்டு

கசப்பாகவே நகர்கிறார்கள்...

நின்று பயணிப்பவர்களும்,

இருக்கையில் ஓரமாக

அமர்ந்து பயணிப்பவர்களும்.

 

ரயில் கிளம்பும் வரை

யாருமே வாங்கவில்லை.

 

யாராவது

கடலை மிட்டாயை

வாங்கியிருந்தால்

இருவரும் இனிப்பாக

பயணித்திருப்பார்கள்..!

 

*கி.அற்புதராஜு*

12 comments:

  1. செந்தில்குமார். J6 March 2022 at 06:57

    கவிதை அருமை.

    ReplyDelete
  2. ஆடலரசு6 March 2022 at 07:03

    Goodbye.

    ReplyDelete
  3. ஆறுமுகம் S6 March 2022 at 07:05

    Sweet message sir.
    I will try to purchase.

    ReplyDelete
  4. பிரபாகரன். R6 March 2022 at 07:05

    Excellent.

    ReplyDelete
  5. செல்லதுரை6 March 2022 at 07:34

    கவிதை மிக அருமை.

    ReplyDelete
  6. அருமை அண்ணா 🎉🙏

    ReplyDelete
  7. Kamalanathan S6 March 2022 at 07:43

    அருமையான கவிதை
    உதவும் மனமே
    வாழ்க்கையை இனிதாக்கும்
    என்பதை மிக அழகாகக்
    கூறியுள்ளது தங்கள் கவிதை

    பாராட்டுகள்

    ReplyDelete
  8. கவிதை மிக அருமை.

    ReplyDelete
  9. ஸ்ரீராம்6 March 2022 at 08:16

    மிக அருமை.

    ReplyDelete
  10. யதார்த்தமான நிகழ்வு அருமையான பதிவு.

    ReplyDelete
  11. கெங்கையா6 March 2022 at 10:22

    அருமையான கவிதை.

    ReplyDelete
  12. Dr. Balamurali7 March 2022 at 18:19

    அனைவரும்
    வாழ
    வழி பிறக்கட்டும்.

    ReplyDelete