“நான் அலுவலகம் செல்ல
மாநகரம்
நோக்கிய
அரை மணி
நேர ரயில் பயணம்.
வழக்கத்துக்கு
மாறாக
இருக்கை
கிடைத்தது.
ஏதிரே
இருவர்.
ஒருவர்
அழகான உடையில்.
மற்றொருவர் அழுக்கான லுங்கியில்.
சற்றே
இடைவெளி விட்டு நகர்ந்தார்
சன்னல்
ஒரமாக அழகானவர்.
நான்
புத்தகத்தில் மூழ்கினேன்.
அடுத்த
நிறுத்தத்தில்
புத்தகத்திலிருந்து
வெளியேறிய நான்
எதிர்
இருக்கையில்
அந்த
அதிசயக் காட்சியை
பார்க்க
நேர்ந்தது...
அழகானவர்
சன்னலில்
சாய்ந்தபடி
உறக்கத்திலிருந்தார்.
அவர்
தோளில்
சரியாக
முகம் சாய்த்து
அழுக்கானவரும்
உறக்கத்திலிருந்தார்.
மனம்
புத்தகத்தை மறந்தது.
முதலில்
அழகானவர்
விழித்தால்
என்ன நடக்கும்
எதிர்பார்ப்புடன்
காத்திருந்தேன்.
எனது
நிறுத்தம் வரும்வரை
இருவரும்
விழிக்கவேயில்லை..!”
*கி.அற்புதராஜு*
கவிதை மிக அருமை.
ReplyDeleteபாராட்டுகள்.
கவிதை மிக அருமை.
ReplyDelete"சமரசம் ஆகும் இடமே;
ReplyDeleteவாழ்வில் காணா
சமரசம் ஆகும் இடமே"
என்ற கவிஞர்.மருதகாசியின்
பாடல் வரிகள் நினைவிற்கு
வந்தன.
கவிதை அருமை.
வாழ்த்து புன்னகை.
ReplyDeleteகவிதை மிக அருமை.
ReplyDeleteகவிதை அருமை.
ReplyDeleteமுடிவு நன்றாக உள்ளது.
ReplyDeleteஅருமை.
👌
ReplyDeleteமிகவும் அருமையான கவிதை,💐💐💐💐
ReplyDeleteNice sir.
ReplyDeleteபாராட்டுகள்.
ReplyDeleteவாழ்த்துகளும்,
நன்றியும்.
கவிதை அருமை.
ReplyDeleteSuperb sir.
ReplyDelete