*எட்டுக்காலியும்
நானும்*
“எட்டுக்காலியும்
நானும் ஒன்று
இருவரும் பிழைப்பது
வாய் வித்தையால்
எட்டுக்காலிக்கு எச்சில்
எனக்குப் பொய்
இருவரும் வலை பின்னுகிறோம்
அது எச்சிலைக் கூட்டி
நான் உண்மையைக் குறைத்து
எட்டுக்காலி வலை
ஜீவித சந்தர்ப்பம்
எனது வலை
சந்தர்ப்ப ஜீவிதம்
எட்டுக்காலிக்குத் தெரியும்
எச்சிலின் நீளமும் ஆயுளும்
எனக்கும் தெரியும்
பொய்யின் தடுமாற்றமும்
அற்பமும்
எட்டுக்காலியின் நோக்கம்
தக்கவைத்தல்
எனவே
வலை - ஒரு பாதுகாப்பு
எனது தேவை தப்பித்தல்
எனவே
பொய் - ஒரு பாதகம்
வாய்வித்தைக்காரர்கள்
இருவரும்
எனினும் எட்டுக்காலி
என்னைவிட பாக்கியசாலி
சொந்த வலையில் ஒருபோதும்
சிக்குவதில்லை அது..!”
*சுகுமாரன்*
#ஆசிரியர் குறிப்பு#
ReplyDelete*கவிஞர் நா.சுகுமாரன்*
(பிறப்பு: ஜூன் 11, 1957;
கோவை, தமிழ்நாடு)
ஒரு தமிழ்க் கவிஞர் ஆவார்.
கவிதை, மொழிபெயர்ப்பு,
விமர்சனம், இதழியல்,
தொலைக்காட்சியின்
செய்தி ஆசிரியர்
எனப் பல்வேறு
பரிமாணங்களில் இவர்
இயங்கிக்கொண்டிருக்கிறார்.
சென்னை பல்கலைக்கழகத்தில்
பி.எஸ்.ஸி பட்டம் பெற்ற
சுகுமாரன்,
அடூர் கோபாலகிருஷ்ணனின்
சினிமா பற்றிய
புத்தகமொன்றை
(சினிமா அனுபவம்) தமிழில்
மொழிபெயர்த்திருக்கிறார்.
'காலச்சுவடு' பத்திரிகையின்
பொறுப்பாசிரியராகப்
பணியாற்றுகிறார்.
இவர் எழுதிய
கவிதைத் தொகுப்புகள் :
கோடைக்காலக் குறிப்புகள்(1985)
பயணியின் சங்கீதங்கள் (1991)
சிலைகளின் காலம்(2000)
வாழ்நிலம் (2002)
பூமியை வாசிக்கும் சிறுமி (2007)
கட்டுரைகள் :
திசைகளும் தடங்களும் (2003)
தனிமையின் வழி ( 2007)
இழந்த பின்னும் இருக்கும்
உலகம் (2008)
வெளிச்சம் தனிமையானது (2008)
உண்மை.
ReplyDeleteஇறைவனின் படைப்பில்
ReplyDeleteமனிதனைக் தவிர
எல்லா உயிர்களும்
தம் உழைப்பையே நம்பி
பிழைக்கின்றன.
கவிஞர் மனிதரின்
கயமைத் தன்மையை
சிலந்தியோடு ஒப்பிட்டு
விளாசுகிறார்.
சபாஷ்..!