எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Wednesday, 7 April 2021

படித்ததில் பிடித்தவை (“தொலைந்த எழுத்து” – இளங்கோ கவிதை)

 


*தொலைந்த எழுத்து*

 

வெகு நாளாக

புரட்டாத புத்தகத்தில்

ஒரு பூச்சி

உயிர் விட்டிருந்தது...

 

உயிர் விட்டிருந்த

பக்கத்தில்

ஓர் எழுத்தை

மறைத்து கிடந்தது…

 

பூச்சியை

எடுத்த பின்

அவ்விடத்தில் இருந்த எழுத்தும்

காணவில்லை...

 

எந்த எழுத்தை

போட்டும் அவ்வாக்கியத்தை

நிரப்ப முடியவில்லை

அதன் உயிரைப் போல..!

 

*இளங்கோ*




8 comments:

  1. #ஆசிரியர் குறிப்பு#

    *கவிஞர் இளங்கோ* - வின்
    இருப்பிடம் கோயம்புத்தூர்.
    "இப்படிக்கு இளங்கோ"
    என்ற Blog மூலம்
    தனக்கு பிடித்தவைகளை
    பகிர்ந்து வருகிறார்.
    (ippadikkuelango.blogspot.com)

    விருப்பம் :
    "விழுகின்ற மழைத்துளிகளில்
    ஒரு துளியையேனும்
    உள்ளங்கையுள் சேமித்து
    வைக்க துணிகின்றேன்."

    ReplyDelete
  2. அருமை.

    ReplyDelete
  3. சத்தியன்7 April 2021 at 08:55

    கவிஞருக்கு பாராட்டுகள்.
    அருமை.

    ReplyDelete
  4. ஸ்ரீராம்7 April 2021 at 08:55

    அருமை.

    ReplyDelete
  5. கெங்கையா7 April 2021 at 09:34

    கவிதை மிக அருமை.
    கவிஞருக்கு பாராட்டுக்கள்.

    ReplyDelete
  6. கவிதை அருமை.
    கவிஞருக்கு பாராட்டுகள்.

    ReplyDelete
  7. கமலநாதன்7 April 2021 at 23:08

    அருமை.
    நிரப்பப்படாத
    எழுத்துக்களும்
    கவிதையாயின.

    பாராட்டுகள்.

    ReplyDelete
  8. Conveys uncontrollable
    feelings.

    ReplyDelete