எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Tuesday, 20 April 2021

படித்ததில் பிடித்தவை (“கண்களின் வழியே” – கமலநாதன் கவிதை)

 


*கண்களின் வழியே*

 

புகுந்த வீட்டில்

முதல் நாள்

இரவு

கிடைத்த

ஸ்பரிசத்தில்

என்னை நான்

இழந்து விட்டேன்.

 

விடியலில்

கிடைத்த முத்தம்

சொன்னது:

 

எல்லோருக்கும்

எது பிடிக்குமென்று

அறிந்து

நடந்து கொள்..!’

 

அதற்குப் பிறகு

பல விடியல்கள்.

எல்லோருக்கும்

எது பிடிக்குமென்று

நான்

அறிந்து கொண்டேன்.

 

எனக்குப் பிடித்தது

எதுவென்று மட்டும்

எவரும்

கேட்கவில்லை.

 

இப்போது

எனக்குப் பிடித்தது

எதுவென்று

எனக்கே தெரியவில்லை.

 

அவளுக்குப்

பிடித்தது

எதுவென்று

கேளுங்கள்.

அப்போது தான்

அவள் உயிர் பிரியும்.

 

நலிந்து கிடந்த

என் உடலருகே

எவரோ சொன்னார்கள்.

 

அம்மா..!.

உனக்குப் பிடித்தது

என்னம்மா..?’

இறுதி மூச்சு

விலகுவதற்காக

என் மகன் கேட்டான்.

 

ஒரு நாளேனும்

நான் நானாக

வாழ்ந்திட நினைத்தேன்.

மனது கூற நினைத்தது

கண்ணீராக மட்டுமே

வெளி வந்தது.

 

கண்ணீர் அடங்கும் நேரம்

எவரோ

சொல்லிக்

கொண்டிருந்தார்கள்.

பாருங்கள்

கண்களின் வழியே

இவள் உயிர்

பிரிகிறதென்று..!

 

*கமலநாதன்*




11 comments:

  1. #ஆசிரியர் குறிப்பு#

    *கமலநாதன்*
    அவர்கள் தமிழ்நாடு
    மின்சார வாரியத்தில் 1980ல்
    உதவிப் பொறியாளராக
    சேர்ந்து, 2015ல்
    மேற்பார்வைப் பொறியாளராக
    பணி ஓய்வு பெற்றவர்.

    தற்போது இருப்பது
    அவரது சொந்த ஊரான
    சேலத்தில்.

    தமிழார்வம் அவரது
    கல்லூரி காலத்தில்
    தொடங்கி இன்று வரை
    தொடர்கிறது.

    அவரது கவிதைகள்
    அனைத்தும்
    அவரது உணர்வின்
    வெளிப்பாடு.

    அவ்வப்போது எழுதும்
    அவரது கவிதைகள்
    எதையும் அவர் இதுவரை
    தொகுத்து வைக்கவில்லை.

    அவரது கவிதையில்
    அவருக்குப் பிடித்த வரிகள்:

    "சுமப்பதின் வலி
    அறிவேன்.
    அதனால்
    என் நினைவுகளும்
    கூட
    எவர் மனதிலும்
    சுமையாயிருக்க
    நான்
    விரும்புவதில்லை."

    ReplyDelete
  2. J. Senthil Kumar20 April 2021 at 06:41

    நன்று.

    ReplyDelete
  3. கவிதை அருமை.

    ReplyDelete
  4. திருமாவளவன்20 April 2021 at 07:42

    அய்யா மிகவும் அருமை.

    ReplyDelete
  5. கவிதை அருமை.

    ReplyDelete
  6. ஸ்ரீராம்20 April 2021 at 09:17

    தங்கள் குடும்பத்திற்காக
    தம்மை அர்பணித்த
    தாய்மார்களுக்கு
    சமர்ப்பணம்.

    ReplyDelete
  7. கவிஞருக்கு பாராட்டுகள்.
    கவிதை அருமை.

    ReplyDelete
  8. சத்தியன்20 April 2021 at 09:20

    கவிதை அருமை.
    பாராட்டுகள்.

    ReplyDelete
  9. அருமை. இன்றும் பல குடும்பங்களில் தொடர்கிறது. கண் கெட்ட பின் சூரிய வணக்கம்.

    ReplyDelete
  10. மனு நீதி வகுத்த வழி.

    ReplyDelete