எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Tuesday, 27 April 2021

படித்ததில் பிடித்தவை (“காரணம்” – வத்ஸலா கவிதை)

 


*காரணம்*

 

அம்மா

அண்ணன் மனைவி

சிநேகிதி

அலுவலகத்தில் அடுத்த சீட்டுக்காரர்

எல்லோரும் கேட்டார்கள்

ஏன் வந்து விட்டாய்?

அடித்தானா?

குடித்தானா?

இன்னொன்று வைத்திருந்தானா?

அப்படி அவன் என்னதான் செய்தான்?

 

என் ஊதியம் தீர்ந்த பின்

குழந்தையின் பால் பவுடர் தீர்ந்த போது

காலி ஒருவன் என்னை அசிங்கமாக

வருணித்தபோது

மகனின் சுரம் கஷாயத்திற்கு

கட்டுபடாமல் போனபோது

வீட்டு சொந்தக்காரர் காலி செய்ய

நோட்டீஸ் கொடுத்தபோது

நான் மார்வலியால் துடித்தபோது

இப்படி பல சமயங்களில்

அவன் ஒன்றுமே செய்யவில்லை..!

 

*வத்ஸலா*




7 comments:

  1. #ஆசிரியர் குறிப்பு#

    *வத்ஸலா*

    ராஞ்சி பல்கலைக்கழத்தில்
    இயற்பியலில் முதுநிலை
    பட்டமும் இந்திய தொழில்நுட்பக்
    கழகத்தில் கணி பொறியியலில்
    முதுநிலை ஆராய்ச்சி பட்டமும்
    பெற்றவர்.
    இருபத்தியைந்து வருடங்கள்
    சென்னை இந்திய
    தொழில்நுட்பக் கழகத்தின்
    (IIT-Chennai) கணினி மையத்தில்
    பணிபுரிந்த சிஸ்டம்ஸ்
    இஞ்சினியரான இவர் 1999ம்
    ஆண்டில் விருப்ப ஓய்வு பெற்றுக்
    கொண்டார்.

    தனது நாற்பத்தி எட்டாவது
    வயதில் முதன் முதலாக எழுதத்
    தொடங்கிய இவருடைய
    கவிதைகளும் சிறுகதைகளும்
    பெரும்பாலும் ‘சுபமங்களா’,
    ‘கணையாழி’, ‘புதியபார்வை’
    போன்ற சிறு பத்திரிகைகளில்
    பிரசுரமாகியுள்ளன.
    இவருடைய ‘அதுவும் கடந்து’
    எனும் சிறுகதை இலக்கிய
    சிந்தனை மாதப் பரிசைப்
    பெற்றது.
    இவருடைய ‘கோபங்கள்’ எனும்
    சிறுகதை ‘அக்னி – சுபமங்களா’
    நடத்திய போட்டியில் ஆயிரம்
    ரூபாய் பரிசைப் பெற்றது.

    இவருடைய ‘சுயம்’ என்கிற
    கவிதைத் தொகுப்பு கவிஞர்
    ஞானக்கூத்தனின்
    முன்னுரையுடன் ஸ்நேகா பதிப்பக
    வெளியீடாக 2000ம் ஆண்டு வெளி
    வந்தது.

    இவருடைய நாவல் ‘வட்டத்துள்’
    உயிர்மை பதிப்பகத்தால்
    2006ம் ஆண்டில் வெளியிடப்பட்டு,
    திருப்பூர் தமிழ்ச்சங்க விருதைப்
    பெற்றது.
    அந்த நாவலை இவரும் ஆங்கில
    எழுத்தாளரான இவருடைய மகள்
    முனைவர் ஸ்ரீலதாவும் மொழி
    பெயர்த்து, ‘Once there was a girl’
    எனும் தலைப்பில்
    (கொல்கத்தாவின் ரைட்டர்ஸ்
    ஒர்க் ஷாப் பதிப்பகம்)
    2012ஆம் ஆண்டில்
    வெளியிட்டிருக்கிறார்கள்.

    ReplyDelete
  2. சத்தியன்21 May 2021 at 07:27

    கவிஞருக்கு பாராட்டுகள்.

    ReplyDelete
  3. கவிதை அருமை.

    ReplyDelete
  4. கவிதை அருமை.

    ReplyDelete
  5. ஸ்ரீராம்21 May 2021 at 11:53

    மிக அருமை.

    ReplyDelete
  6. கெங்கையா21 May 2021 at 11:54

    கவிதை மிக அருமை.

    ReplyDelete
  7. வலி கொடுமையானது

    ReplyDelete