*கதவு*
இரண்டாவது பக்க
விளிம்பிலிருந்தும்
மூன்றாவது பக்க
விளிம்பிலிருந்தும்
நான்காவது பக்கம்
நிறைவுற்றபோது
மரம் உறுதி செய்தது
தான் ஒரு கதவென..!
இந்த வேலை
இந்த மினுமினுப்பு
பயன்பாடு
எதுவுமே கதவுக்கு நிறைவில்லை.
எதிரே இருக்கும் மரத்தை
பார்த்தபடி இருப்பதைத் தவிர.
நான் கதவைத் திறந்து
மரத்தின் கீழ் விளையாடும்
சிறுவர்களைப் பார்த்தபடி
இருப்பேன்.
கதவு மரத்தையும்
நான் சிறுவர்களையும்
அப்படி
பார்த்துக்கொண்டிருந்த ஒருநாள்
காற்றடித்து
கதவும் நானும் ஒருவரையொருவர்
பார்த்துக்கொண்டோம்.
ஞாபகப்படுத்திச் சொன்னேன்
“மரம்தானே நீங்க?”
கதவு சொன்னது
“ஏ, குட்டிப்
பயலே..!”
*மதார்*
(வெயில் பறந்தது)
பழைய நினைவுகள். அருமையான கவிதை.
ReplyDeleteமிக அருமை.
ReplyDeleteWow..! Super..!
ReplyDeleteகவிதை அருமை.
ReplyDelete