*கடவுள் விளையாட்டு*
“பிரார்த்திக்கும்
அம்மாவின்
முந்தானையைப்
பிடித்திழுக்கும் குழந்தை.
கண்ணாமூச்சி விளையாட்டின்
மூன்றாம் நபர் போல
கடவுள் உதட்டில் கைவைத்துப்
புன்னகைக்கிறார்.
குழந்தை புன்னகைத்தபடியே
கடவுளைப் பார்க்கிறது.
அம்மா கண் திறக்கவும்
கடவுள் விளையாட்டிலிருந்து
காணாமல் போகிறார்..!”
*மதார்*
(வெயில் பறந்தது)
கவிதை அருமை.
ReplyDeleteகவிஞருக்கு பாராட்டுகள்.
அருமை.
ReplyDeleteகவிஞருக்கு பாராட்டுக்கள்.
ReplyDeleteமிக அருமை.
ReplyDeleteSuperb.
ReplyDeleteSema rasanai.