எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Friday, 2 April 2021

படித்ததில் பிடித்தவை (“முதல் கல்” – நர்சிம் கவிதை)

 


*முதல் கல்*

 

உன்

பயணத்தில் இடர்ப்பட்ட

முதல் கல் நான்..!

 

என்

நெடும்பயணத்தில்

நான் இளைப்பாறிய

நிழல் மரம்

நீ..!”

 

*நர்சிம்*




4 comments:

  1. #ஆசிரியர் குறிப்பு#

    எழுத்தாளர் *நர்சிம்*
    அவர்களின்
    சொந்த ஊர் மதுரை.
    பணி நிமித்தம்
    வசிப்பது சென்னையில்.
    2007-ல் எழுதத் தொடங்கி,
    தொடர்ந்து தமிழின்
    முதன்மையான இதழ்களில்
    சிறுகதைகள் மற்றும்
    தொடர்கதைகள் பிரசுரமாகிக்
    கொண்டிருக்கின்றன.

    90-களின் மதுரையை,
    மாந்தர்களை எழுதுவதில்
    அதிக ஆர்வம் கொண்டவர்.

    அய்யனார் கம்மா (2010),
    ஒரு வெய்யில் நேரம் (2012),
    பைத்தியக்காலம்(2017)
    மதுரைக் கதைகள் (2017),
    ஆகிய சிறுகதைத்
    தொகுப்புகளும்,

    தீக்கடல் (2010),
    தற்கொலைக்கு முயன்று
    தோற்றவன் (2013)
    ஆகிய கவிதைத்
    தொகுப்புகளும்,

    அலப்பறை (2017) என்கிற
    நாவலும் இதுவரை
    வெளிவந்துள்ளன.

    உயிருதிர்காலம் என்ற
    சிறுகதை, நவீன விருட்சத்தால்
    வெளியிடப்பட்ட சிறந்த
    சிறுகதைகள் தொகுப்பில்
    இடம்பெற்றது.

    'அய்யனார் கம்மா' என்ற
    சிறுகதை குறும்படமாக
    எடுக்கப்பட்டு, அது ஃபெட்னா
    உட்பட பல விருதுகளை
    வென்றுள்ளது.

    மனைவி மற்றும் ஒரு மகன் -
    வசிப்பது சென்னை அடையாறு.

    ReplyDelete
  2. செந்தில்குமார். J2 April 2021 at 07:04

    கவிதை அருமை.

    ReplyDelete
  3. ஸ்ரீராம்2 April 2021 at 08:17

    அருமை.

    ReplyDelete
  4. Conveys Feelings.

    ReplyDelete