எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Tuesday 6 April 2021

படித்ததில் பிடித்தவை (“பொய்” – கமலநாதன் கவிதை)


 *பொய்*

 

பொய்க் கதைகள்

கேட்டு

மகிழ்ந்திடும் குழந்தைகள்,

அரசியல் வாதிகள்

முன் நாம்.

 

ஒரு வேறுபாடு

மட்டும்.

பொய் என்று

அறியாது

குழந்தைகள்.

 

நாம்..?

 

*கமலநாதன்*




3 comments:


  1. #ஆசிரியர் குறிப்பு#

    *கமலநாதன்*
    அவர்கள் தமிழ்நாடு
    மின்சார வாரியத்தில் 1980ல்
    உதவிப் பொறியாளராக
    சேர்ந்து, 2015ல்
    மேற்பார்வைப் பொறியாளராக
    பணி ஓய்வு பெற்றவர்.

    தற்போது இருப்பது
    அவரது சொந்த ஊரான
    சேலத்தில்.

    தமிழார்வம் அவரது
    கல்லூரி காலத்தில்
    தொடங்கி இன்று வரை
    தொடர்கிறது.

    அவரது கவிதைகள்
    அனைத்தும்
    அவரது உணர்வின்
    வெளிப்பாடு.

    அவ்வப்போது எழுதும்
    அவரது கவிதைகள்
    எதையும் அவர் இதுவரை
    தொகுத்து வைக்கவில்லை.

    அவரது கவிதையில்
    அவருக்குப் பிடித்த வரிகள்:

    "சுமப்பதின் வலி
    அறிவேன்.
    அதனால்
    என் நினைவுகளும்
    கூட
    எவர் மனதிலும்
    சுமையாயிருக்க
    நான்
    விரும்புவதில்லை."

    ReplyDelete
  2. Perfect கவிதை
    for this scenario.

    ReplyDelete
  3. ஸ்ரீராம்6 April 2021 at 12:09

    தெரிந்தே பொய்யுடன்
    சமரசம் செய்யும்
    பெரியவர்கள்!

    ReplyDelete