எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Sunday, 4 April 2021

*நலமா..?*


உடல் நிலைப்பாதித்து

மீள்கின்ற உறவினரை

நலம் விசாரிக்கையில்

அவரது நோய்க்கான

அறிகுறிகள் பற்றி

தெளிவாக கேட்கிறேன்

ஐம்பது வயதை கடந்த நான்..!

 

என்னுடைய சுகவீனங்களுடன்

அவற்றைப் பொருந்திப் பார்த்து

எனது உடல்நிலையை

மதிப்பீடு செய்கிறது மனசு..?”

 

*கி.அற்புதராஜு*


7 comments:

  1. கவிதை அருமை.

    ReplyDelete
  2. சூப்பர்.

    ReplyDelete
  3. கமலநாதன்4 April 2021 at 10:52

    அருமை.

    முதுமை எல்லாவற்றையும்
    ஒப்பீடு செய்கிறது.
    வாழ்ந்த நாட்களை
    வாழும் நாட்களை
    வரப்போகும் நாட்களை.
    தன்னோடும்
    பிறரோடும்.

    தங்கள் கவிதை
    மிகவும் நன்று.

    ReplyDelete
  4. ஸ்ரீராம்4 April 2021 at 12:03

    எதிலும், எப்போதும்
    ஒப்பீடு செய்து
    கொண்டிருப்பது
    மனித மனம்.

    ReplyDelete
  5. பிருந்தா4 April 2021 at 13:07

    ஐம்பது வயது
    என்று இல்லை...
    நாற்பது வயதில் கூட
    நம் உடல் சார்ந்து
    மட்டுமில்லாமல்
    நமது குழந்தைகளுக்காக
    மற்றும் தாய், தந்தைக்காக
    மற்றவர்களின்
    உடல்நிலையோடு
    ஒப்பீடு செய்கிறது
    மனசு..!

    அருமையான கவிதை.
    பாராட்டுகள்.

    ReplyDelete