எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Sunday, 18 April 2021

*நானும் மலர்ந்தேன்*

 

தினந்தோறும்

செல்லும்

நடைப்பாதையில்

நிற்கும் மரத்தை

அன்றுதான்

முதன்முதலில்

அண்ணாந்து பார்த்தேன்...

 

கோடை மழையுடன்

வந்த பெருங்காற்று

உதிரச் செய்திருந்தது

மலர்களை

அத்தனை அழகாக

அந்த மரத்தைச்சுற்றி..!

 

*கி.அற்புதராஜு*


16 comments:

  1. அருமை.
    கால்கள் பூமியில்
    இருந்தாலும் சில
    சமயங்களில்
    விண்ணை நோக்கிய
    பார்வையும்
    அவசியம் தான்.

    ReplyDelete
  2. சத்தியன்18 April 2021 at 06:21

    கவிதை அருமை.
    பாராட்டுகள்.

    ReplyDelete
  3. கவிதை அருமை.

    ReplyDelete
  4. J. Senthil Kumar18 April 2021 at 06:27

    அருமை.

    ReplyDelete
  5. நந்தகுமார்18 April 2021 at 07:16

    மனிதனின் பார்வை தன் இலக்கைமட்டுமேயன்றி அவ்வப்போது எல்லா இடங்களிலும் செலுத்தினால் மட்டுமே இயற்கையை ரசிக்க முடியும்.

    ReplyDelete
  6. கவிதை அருமை.

    ReplyDelete
  7. Very fine.

    ReplyDelete
  8. ஸ்ரீராம்18 April 2021 at 07:43

    அருமை.

    ReplyDelete
  9. Elangovan Kovai18 April 2021 at 07:46

    Good one.

    ReplyDelete
  10. கமலநாதன்18 April 2021 at 08:17

    அருமை.
    துன்பத்தின் போதே அதுவரை காணாதவற்றைக் காண்கிறோம் ஆறுதல் தேடி.
    அழகாக உருவகப்படுத்தியிருக்கிறது
    இக் கவிதை.
    பாராட்டுகள்.

    ReplyDelete
  11. Dr. Ramya Avinash18 April 2021 at 08:52

    Superb.

    ReplyDelete
  12. பிருந்தா18 April 2021 at 09:41

    "நீ
    செய்யும்
    செயல்கள்
    சிறப்பாக
    இருந்தால்
    உன்னை
    தலை நிமிர்ந்து
    பார்ப்பார்கள்..!"
    என்பதை
    அழகாக
    உணர்த்துகிறது
    இக்கவிதை..!

    பாராட்டுகள்.

    ReplyDelete
  13. கோடை மழையில் மண்ணின் மணமும் மலரின் மணமும் அருமையான உணர்வு யதார்த்தமான நடை.

    ReplyDelete
  14. கவிதா ராணி18 April 2021 at 13:58

    கவிதை அருமை.
    கவிதைக்கான
    இணைப்புப் படமும்
    சிறப்பு.
    கவிதைக்கான
    தலைப்பும்
    மிகப் பொருத்தம்.
    கவிதையைப் படித்ததும்
    நானும் மரத்தை
    அண்ணாந்துப்
    பார்த்தேன்.
    இணைப்புப் படத்தில்
    மரத்தின் மேல் பகுதி
    காட்சிப்படுத்தவில்லை.
    நிழல் நிஜமாகவில்லை
    எனக்கு.

    ReplyDelete
    Replies
    1. இக்கவிதை எழுதத்தூண்டிய
      காட்சியை அடுத்த நாள்தான்
      புகைப்படம் எடுக்க முடிந்தது.
      அப்புகைப்படம் கவிதை
      எழுதத் தூண்டிய
      முதல் நாள் காட்சியை
      பிரதிபலிக்கவில்லை.

      எனவே இணையத்தில்
      கிடைத்தப் புகைப்படத்தை
      பதிவிட்டுள்ளேன்.

      கவிஞருக்கு கிடைத்த
      அந்தக் காட்சி
      உங்களுக்கும் கிடைக்க
      பிரார்த்திக்கிறேன்.
      அப்போது
      நிழல் நிஜமாகிவிடும்.

      தங்களின் ரசிப்புக்கு நன்றி.

      Delete