எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Tuesday 13 April 2021

படித்ததில் பிடித்தவை (“தலையாட்டம்” – கவிக்கோ. அப்துல் ரகுமான் கவிதை)

 


*தலையாட்டம்*

 

நடக்கும் பாதையெல்லாம்

காலோடு கோல்சுவடு

மறுப்பது போல்

தலையாட்டம்

வாழ்வையா?

மரணத்தையா?

 

இருமல்

இது இருமல் அல்ல

மரணம் உயிர்வீட்டுக் கதவை

இடிக்கும் ஓசை..!

 

*கவிக்கோ. அப்துல் ரகுமான்*




1 comment:

  1. #ஆசிரியர் குறிப்பு#

    *அப்துல் ரகுமான்*
    (நவம்பர் 9, 1937 - சூன் 2, 2017),
    தமிழ்நாட்டைச் சேர்ந்த
    கவிஞரும், தமிழ்ப்பேராசிரியரும்
    ஆவார்.
    *கவிக்கோ* என்று சிறப்பாகக்
    குறிப்பிடப்படுகிறார்.
    'வானம்பாடி' இயக்கக்
    கவிஞர்களோடு
    இணைந்தியங்கியவர்.
    தம் கவிதை வெளியீடுகளின்
    வாயிலாகப் புதுக்கவிதைத்
    துறையில் நிலைநிறுத்திக்
    கொண்டவர்களுள்
    அப்துல் ரகுமான் சிறப்பாகக்
    குறிப்பிடத் தக்கவர் ஆவார்.
    அவர் 'பால்வீதி' என்ற கவிதைத்
    தொகுதி மூலம் தம்மை ஒரு
    சோதனைப் படைப்பாளியாக
    இனங்காட்டிக் கொண்டார்.
    அத்தொகுதி வெளிவந்த போது
    கவிதையை நேரடியாகத் தராமல்
    உவமைகள், உருவகங்கள்,
    படிமங்கள், குறியீடுகள்
    ஆகியவற்றின் வழி வெளியீட்டு
    முறையை அமைத்துக்
    கொண்டார்.
    தமிழில் கவிதைக் குறியீடுகள்
    குறிந்து ஆராய்ந்து முனைவர்
    பட்டம் பெற்றவர்.
    தமிழில் ஹைக்கூ, கஜல்
    ஆகிய பிறமொழி
    இலக்கியங்களை
    முனைந்ததிலும் பரப்பியதிலும்
    இவர் குறிப்பிடத்தக்கவர் ஆவார்.

    1960 க்கு பின் கவிதை உலகுக்கு
    வந்த இவர் கவியரங்கக்
    கவிதைகளாலும்
    சிறப்படைந்துள்ளார்.
    சிலேடை வார்த்தைகளால்
    கேட்போரைக் கவர்வது
    இவரது பாணி.
    வாணியம்பாடி இஸ்லாமியக்
    கல்லூரியில் தமிழ்ப்
    பேராசிரியராகப் பணி புரிந்தவர்.
    அறிவுமதி உள்ளிட்ட
    இளந்தலைமுறை
    கவிஞர்களுக்கு ஆசானாக
    விளங்கினார்.
    ஆலாபனை கவிதைத்
    தொகுப்புக்காக
    சாகித்ய அகாடமி விருது
    பெற்றவர்.

    அப்துல் ரகுமான்
    மதுரையில் வைகை
    ஆற்றின் தென்கரையில்
    1937 நவம்பர் 2 ஆம் நாள்
    உருதுக் கவிஞர் மஹி என்னும்
    சையத் அஹமத் – ஜைனத் பேகம்
    இணையருக்கு மகனாகப்
    பிறந்தார்.

    அப்துல் ரகுமான் தனது
    தொடக்கக் கல்வியையும்
    உயர்நிலைப் பள்ளிக்
    கல்வியையும் மதுரையில் உள்ள
    பள்ளிகளில் பெற்றார்.
    பின்னர் மதுரை தியாகராசர்
    கல்லூரியில் சேர்ந்து இடைநிலை
    வகுப்பில் தேறினார்.
    தொடர்ந்து அக்கல்லூரியிலேயே
    பயின்று இளங்கலை, முதுகலை
    பட்டங்களைப் பெற்றார்.
    அப்பொழுது முனைவர்
    மா. இராசமாணிக்கனார்,
    ஔவை துரைசாமி,
    அ. கி. பரந்தாமனார்,
    அவ்வை நடராசன்,
    அ. மு. பரமசிவானந்தம் ஆகிய
    தமிழறிஞர்களிடம் பயின்றார்.

    சென்னை தரமணியில்
    அமைந்துள்ள உலகத்
    தமிழாராய்ச்சி நிறுவனத்தில்
    அதன் இயக்குநராகப்
    பணியாற்றிய
    ச. வே. சுப்பிரமணியத்தை
    வழிகாட்டியாகக் கொண்டு
    புதுக்கவிதையில் குறியீடு
    என்னும் தலைப்பில் ஆய்வு
    செய்து சென்னைப் பல்கலைக்
    கழகத்தில் முனைவர் பட்டம்
    பெற்றார்.

    தமிழில் முதுகலைப் பட்டம்
    பெற்றதும் தியாகராசர் நடத்திய
    தமிழ்நாடு என்னும் நாளிதழில்
    மெய்ப்பு திருத்துநராகச்
    சிலகாலம் பணியாற்றினார்.
    அப்பொழுது தமிழகத்தில்
    இருந்த ஐந்து இசுலாமியக்
    கல்லூரிகளுக்கு விரிவுரையாளர்
    பதவிக்காக விண்ணப்பித்தார்.
    அவற்றுள் வாணியம்பாடி
    இசுலாமியா கல்லூரியில்
    பணியாற்ற அவருக்கு 1961 ஆம்
    ஆண்டில் வாய்ப்புக் கிடைத்து.
    அங்கே சிற்றுரையாளர்,
    விரிவுரையாளர், பேருரையாளர்,
    பேராசிரியர், எனப் படிப்படியாக
    உயர்ந்து 1991ஆம் ஆண்டில்
    விருப்ப ஓய்வுபெற்றார்.
    இதில் 20 ஆண்டுகள்
    தமிழ்த்துறையின் தலைவராகப்
    பணியாற்றினார்.

    ReplyDelete