“நாலரை
மணி ரயிலுக்கு
நாலு மணிக்கே கூடையுடன்
வந்து
ஜங்சனில் அமர்ந்திருக்கும்
கொய்யா விற்கும் சாந்தக்கா.
மெல்லிய வெள்ளை வேட்டியை
இரண்டாக மடித்து கூடை மேலே
போடப்பட்டும்
கொஞ்சம் வாடிய கொய்யா இலைகள்
வெளியே தெரியும்.
கொய்யா வெட்ட பெரிய
கத்தியும்
விருப்பமானவர்களுக்கு
உப்பு, மிளகாய்ப் பொடி கலந்த
பிளாஸ்டிக் டப்பாவும்
கூடையில் இருக்கும்.
வண்டி வந்து நின்றவுடன்
யாரோ ஒருவர் தூக்கி விட
கூடையுடன் வந்து
பெட்டிக்குள் வந்து நிற்கும் சாந்தக்கா
திரும்ப இறக்கி வைக்கவும்
ஏற்றவும்
யாரோ ஒருவர் உதவுவர்.
வண்டி கிளம்பியதும்
கூடையை நகர்த்திக்கொண்டு
கொய்யா விற்க ஆரம்பிக்கும் சாந்தக்கா.
அடுத்த ஸ்டேசனில்
அடுத்த பெட்டி என்று
ஒவ்வொரு பெட்டியாய்
கொய்யா மணம் பரவும்.
ஒருநாள் சுமையைத்
தூக்கிவிடும்போது
‘சொமையா
இல்லியா அக்கா?’ என்றேன்.
‘ம்...
இதென்ன சொமை...
குடிகார புருசனும்
ரெண்டு புள்ளை, ஒரு பையனையும் விடவா
பெரிய சொமை'
என்று சொல்லிவிட்டு...
‘கொய்யாக்
காயேய்...’ எனக்கூவிக் கொண்டு
அடுத்த பெட்டிக்கு
அவசரமாகப் போனது சாந்தக்கா...
சிக்னல் இன்னும்
சிவப்பில்தான் இருந்தது..!”
*இளங்கோ*
#ஆசிரியர் குறிப்பு#
ReplyDelete*கவிஞர் இளங்கோ* - வின்
இருப்பிடம் கோயம்புத்தூர்.
"இப்படிக்கு இளங்கோ"
என்ற Blog மூலம்
தனக்கு பிடித்தவைகளை
பகிர்ந்து வருகிறார்.
(ippadikkuelango.blogspot.com)
விருப்பம் :
"விழுகின்ற மழைத்துளிகளில்
ஒரு துளியையேனும்
உள்ளங்கையுள் சேமித்து
வைக்க துணிகின்றேன்."
கவிதை அருமை.
ReplyDeleteகவிதை அருமை.
ReplyDeleteநிதர்சனம்.
ReplyDeleteகவிதை அருமை.
ReplyDeleteஇது போன்ற
ReplyDeleteஎவ்வளவோ சாந்தா
அக்காக்கள் தங்கள்
கூடை சுமையுடன்
பொறுப்பற்ற
கணவனையும்
பிள்ளைகளையும் சுமந்து
வேதனையுடன் வாழ்கிறார்கள்,
என்றாவது விடியும் என்ற
நம்பிக்கையுடன்..!
அருமை.
ReplyDelete