*கடைசி நிமிடக் கருணையென்பது*
“கடைசி
நிமிடக் கருணையென்பது…
கிடத்தப்பட்டுருக்கும்
ஆட்டினை
அறுக்காமல் விட்டுவிடுவது.
சிறகுகள் பிடிக்க
மனமில்லாமல்
வண்ணத்துப் பூச்சியின்
அருகில் அமர்ந்திருத்தல்.
கடைசித்துளி வரையிலும்
பருகாமல்
தேநீரை மிச்சம் வைத்தல்.
உதிர்ந்து கிடக்கும்
மலரொன்றினை
மிதிக்காமல் கடந்து போதல்.
பறவைகளின் மீது
எறிய நினைத்திருந்த
கற்களை
உள்ளங்கைக்குள்
பத்திரப்படுத்துதல்.”
*கூடல் தாரிக்*
#ஆசிரியர் குறிப்பு#
ReplyDelete*கூடல் தாரிக்*
கூடலூரில் வசிக்கிறார்.
முனைவர் பட்டம் (Doctorate)
பெற்றவர்.
கற்பித்தல் பணியை
தேனி மாவட்டம்,
கம்பத்தில் 2008-லிருந்து
மேற்க்கொள்கிறார்.
கூடலூர் NSKP மேனிலைப்
பள்ளியிலும், யாதவா
கல்லூரியிலும் படித்தவர்.
பிடித்த வாசகம்:
"யாதும் ஊரே
யாவரும் கேளீர்."
கவிஞர் கூடல் தாரிக்
எழுதிய கவிதை நூல்கள்:
1. ஆலிவ் இலைகள் (2015)
2. பெருங்காட்டுச் சுனை (2017)
3. மூங்கில் வனம் (2018)
கவிதை அருமை.
ReplyDeleteமிக அருமை.
ReplyDeleteReal Karunai.
ReplyDelete