“உறவினர் மகனுக்கு
திருமணம் செய்ய
பெண் தேடி
திருமண தகவல் மையம்
சென்றோம்...
ஒவ்வொரு ஃபைலிலும்
முப்பதை கடந்த
திருமணமாகாத
பெண்கள் நிறையபேர்
இருந்தார்கள்.
அழகில்லாதவர்கள்...
வேலையில்லாதவர்கள்...
செவ்வாய் தோஷங்கள்...
உறவுகளை பாதிக்கும்
நட்சத்திரங்கள்...
என நிறைய பெண்கள்
ஒதுக்கப்பட்டிருந்தார்கள்.
அவர்களில்...
அழகான பெண் ஒருவர்
செவ்வாய் தோஷத்தால்
முப்பது வயது தொட்டதை
அறிந்து மனது
சங்கடப்பட்டது...
அழகில்லாத பெண்கள்
நிறைய பேர் இருந்தும்..!”
*கி.அற்புதராஜு*
கவிதை அருமை.
ReplyDeleteபாராட்டுகள்.
காலை வணக்கம்.
ReplyDeleteகவிதை நன்றாக
இருக்கிறது.
கடைசி 2 வரிகளை
தவிர்த்திருக்கலாம்.
அது இல்லாமலேயே
நன்றாக இருக்கிறது.
இறுதி இரு வரிகளில்தான் இருக்கிறது கவிதையின் உட்பொருள் என்று நினைக்கிறேன். மற்ற குணங்களை ப் பின்தள்ளி அழகுக்கு இயற்கையாக கிடைக்கும் ஈர்ப்பை பதிவு செய்கிறது இந்த கவிதை என்று நினைக்கிறேன்.
DeleteTrue...
ReplyDeleteகவிதை அருமை.
பாராட்டுகள்.
மிக அருமை.
ReplyDeleteTrue... Super..!
ReplyDeleteஅருமை.
ReplyDeleteதுன்பத்திலும்
அழகற்றவரை ஒதுக்கும்
மன நிலையை
அழுத்தமாய்
பதிவிடுகிறது
இக் கவிதை.
பாராட்டுகள்.
அருமையான கருத்து. காலங்கள் மாறினாலும் என்னங்களில் மாற்றம் இல்லை.
ReplyDelete