“வெளியூரில் உள்ள
கல்லூரியில்
மகனை சேர்த்து
ஹாஸ்டலில்
விட்டு வந்த
தாய், தந்தை...
வீட்டுக்கு திரும்பியவுடன்
நடந்தவற்றை தந்தை
தன்னுடன் பணிபுரியும்
அலுவலக நண்பருக்கு
விலாவாரியாக
விவரித்துக்கொண்டிருந்தார்
தொலைபேசியில்...
பேரனைப் பற்றிய
உரையாடலை
வராந்தாவிலிருந்த
தாத்தாவும், பாட்டியும்
கேட்டுக் கொண்டிருந்தனர்..!”
*கி.அற்புதராஜு*
அவ்வளவு தான் தாத்தா பாட்டியின் முக்கியத்துவம். அருமையான நிகழ் கால பதிவு.
ReplyDeleteSuper.
ReplyDeleteஅருமை.
ReplyDeleteதற்போதைய
ReplyDeleteசூழ்நிலையில்
பெற்றவர்களுக்கு
மகன்கள் அளிக்கும்
மரியாதையை!
அழகாக விளக்கும்
கவிதை.
நெஞ்சை தொட்டது.
feeling lonely.
ReplyDeleteநல்ல தலைப்பு. வீட்டுக்கு வந்ததும் அவர் சொல்லவும் இல்லை, இவர்கள் கேட்கவும் இல்லை. அந்த இடைவெளி ஏன் எப்படி வந்தது என்று நம் மனதில் விரிகிறது கவிதை.
ReplyDelete