“மனைவியின்
வேண்டுதலை
நிறைவேற்ற
ஞாயிறு மாலை
கோவிலுக்கு
பேருந்தில் செல்லும் முன்
கோவில் அருகில்
பூமாலை கிடைக்குமோ,
கிடைக்காதோ என எண்ணி
ஏறுகின்ற பேருந்து நிலையம்
அருகிலிருந்த பூக்கடையில்
ஒற்றை பூமாலையை
விலைப் பேசி வாங்கி
பேருந்தில் ஏறினோம்.
ஒற்றை
பூமாலையைப்
பார்த்த சகப் பிரயாணி
சற்றே தள்ளி உட்கார்ந்தார்.
இறங்கும்
பேருந்து நிலையம்
அருகிலேயே கோவில்
இருந்ததால், நாங்கள்
கோவிலுக்குள் நுழைவதை
அவர் பார்த்திருந்தால்
திருப்தி அடைந்திருப்பாரோ
என்னவோ..!”
*கி.அற்புதராஜு*
இயல்புநிலை
ReplyDeleteதான் நினைத்தது வேறு, நடந்தது வேறு என ஏமாற்றம் அடைந்திருப்பார். மெய்ப்பொருள் காண்பது அறிவு.
ReplyDeleteArumai.
ReplyDeleteநம்மில் பலரும்
ReplyDeleteஎதிர்மறையான
எண்ணங்களை
மட்டுமே
உடையவர்களாக
உள்ளனர்.
கவிதை அருமை
ReplyDeleteபயணி பாவம்..!
மிக அருமை.
ReplyDelete