*மரத்தின் வீடு*
“யார்
சொன்னது,
மரம் தனக்கோர்
வீடு கட்டிக்
கொள்ளவில்லையென்று?
தனது இலைகளாலும் கிளைகளாலும்
கொம்புகளின் அற்புத
அமைப்புகளாலும்
தனக்குள்ளே மரம் தனக்கோர்
வீடு கட்டிக் கொண்டுள்ளது.
மழை புயல் வெயில் பனி
திருடர்கள்
ஆகியவற்றிடமிருந்து நம்மைப்
பாதுகாக்கவே வீடு என
அறிந்திருந்த
மனிதனைத் திகைக்க வைத்தது
அதன் வீடு.
காலம், மரணம், வேதனை
ஆகியவற்றிலிருந்து
தன்னைப் பாதுகாத்துக்
கொள்ளும்
தன் மலர் காய் கனி மற்றும்
இவை எல்லாமுமான தனக்காகவே
அது தனக்கோர் வீடு
கட்டிக்கொண்டுள்ளது..!”
*தேவதேவன்*
மரத்திற்கு இயற்கை அளித்த தன்னிறைவு திட்டம், எதற்கும் பிறரை சார்ந்திராமல்!
ReplyDeleteSuper.
ReplyDeleteSuperb.
ReplyDeleteஅருமை..!
ReplyDelete