*எல்லாம்
இருந்தும்*
“சுற்றுச் சுவரோடு
வாசல் இரும்புக்கதவில்
அஞ்சல் போட ஒரு பெட்டி.
அன்றாடம் ஓடும்
தண்ணீர் மின்னியக்கிக்கு
தகரத்தால் ஆன சிறு வீடு.
பிரிய ரங்கனின் விதவிதமான
புகைப்படங்களுடன்
ஏனைய கடவுளர்க்கும்
மணிக் கதவம் கொண்ட
பெருமாள்படியுள்.
அலங்கார பொம்மைகளுக்கு
வரவேற்பறையில் ஒரு ஓரிடம்.
செல்ல நாய்க்கு
மாடிப் படிக்கட்டுக்கடியில்
சிறு குடியிருப்பு.
குப்பைத்தொட்டிக்கு கூட
சமையலுள்ளில்
கதவோடு இடம் ஒன்று.
தாளிக்கும் கடுகுக்கும்
அஞ்சறைப் பெட்டியில் இடம்.
காலணிகளை வைக்கவோ
ஷூ ராக்.
எல்லாவற்றுக்கும் இடமிருக்கிறது
வயதேறி குழந்தையான என்
பெற்றோர்களுக்கான
இடத்தை தவிர..!”
*லாவண்யா சுந்தர்ராஜன்*
மிக அருமையான வரிகள்.
ReplyDeleteஅருமை.
ReplyDeleteஅருமையும் மற்றும் வருத்தமும் சேர்ந்த கவிதை நன்றி வணக்கம்.
ReplyDeleteSuper.
ReplyDeleteVery nice..!
ReplyDeleteமுதியவர்களின் அவலங்களை வேதனையுடன் வடித்தெடுத்த கவிதை.
ReplyDeleteஉண்மையான வரிகள்.
ReplyDeleteNice.
ReplyDelete1. தேவையானவற்றிற்கு மட்டுமே இடம்.
ReplyDelete2. யாருடைய பெற்றோருக்கு. இந்த ஒரு குழந்தை யுகத்தில் கூட 4 பேர். தாங்க முடியுமா?
3. மாடிப்படியின் கீழ் ஷு ரேக் இத்யாதி இடங்களில் தங்க வைக்க முடியுமா என்ன? கவிஞர் மீண்டும் பொங்கி விடுவாரே.
4. எப்படியும் அந்த மணிக்கதவின் பக்கத்து சுவரில் இடம் ரிஸர்வ்ட்.