*இரவல்*
“எமக்கு என்று
சொற்கள் இல்லை.
மொழி எம்மை
இணைத்துக் கொள்வதுமில்லை.
எனக்கென்று சரித்திரமில்லை.
நீங்கள் கற்றுத் தந்ததே நான்.
வார்த்துத் தந்ததே நிஜம்.
எனக்கென்று கண்களோ
செவிகளோ கால்களோ
இல்லை.
அவ்வப்போது நீ இரவலாய்
தருவதைத் தவிர..!”
*கனிமொழி*
No comments:
Post a Comment