*செடி*
“அறியாது
ஒரு சிறு செடியை
மண்ணிலிருந்து பிடுங்கிவிட்டேன்.
திசைகள் அதிரும் தனது
பெருங்குரலால்
அது மரமாகிவிட்டது என்
கையில்.
அந்தரவெளியில் துடிதுடித்து
ஆதரவுக்குத் துழாவின அதன்
வேர்கள்.
பாய்ந்து போய் அதனை
அணைத்துக் கொண்டது பூமி.
கொலைக் கரத்தின்
பிடிதகர்த்து
மேல்நோக்கிப் பாய்ந்தது புது
ரத்தம்.
கழுத்தில்பட்ட தழும்புடனே
பாடின தலைகள்..!”
*தேவதேவன்*
காலை வணக்கம். இரண்டாவது பாதி புரிய கொஞ்சம் நேரமாகிவிட்டது. செடி திரும்பவும் நடப்பட்டு விட்டதாக சொல்லப்படும் விதம் அருமை கழுத்தில் பட்ட தழும்புடன்....
ReplyDeleteஅருமை.
ReplyDeleteபிடுங்கப்பட்ட செடியின் மரண வேதனையையும், அது மீண்டும் நடப்பட்டபிறகு நரகத்தின் வாயிலிருந்த மீண்ட செடியின் ஆனந்தத்தையும் அற்புதமாக இழைத்திருக்கிறார் கவிதையில். மிக அருமை.
ReplyDelete