*நேர்கோட்டுப்
பயணம்*
“இரை
பழகும் ஆட்டுக்குட்டி
இலைகளில் வரைகிறது
விதவிதமாய்த்
தன் பசியின் ஓவியங்களை..!
நடைபயிலும் குழந்தையின்
குறிப்பிட்ட எல்லைக்குள்ளான
பயணங்கள்
ஒருபோதும் அலுப்பதேயில்லை..!
எழுதக் கற்கும் சிறுமி
தீட்டுகிறாள்
ஒவ்வொரு எழுத்தும்
உருவான வரலாற்றை..!
முதல் முதலாய்
சமைக்கப் பழகும்
ஒருவன் உணர்கிறான்
இதுவரையிலான
தான் சுவைக்க
விரும்பிய சுவைகளை..!”
*சாமி கிரிஷ்*
நன்று.
ReplyDeleteTrue wonders.
ReplyDeleteமிக அருமை...
ReplyDeleteஎவற்றிலும் முதல் அனுபவம் எப்போதும் ஆனந்தமே!
ReplyDelete