எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Monday, 18 January 2021

படித்ததில் பிடித்தவை (“நானே... நானாய்...” – சே.பிருந்தா கவிதை)

 



*நானே... நானாய்...*

 

நேரே கண்பார்க்க தயங்கி

தரை பார்ப்பினும் கண்கூசும்

உன் வீட்டு பளிங்கு தரை.

 

சற்றே கோணம் திரும்ப

சுவரின் உயர்தர டிஸ்டம்பர்

கண்ணில் உறுத்தும்.

 

பலபக்கம் வியூகம்

வைத்து எனை மூலையில் தள்ளிடும் உன் வீடு.

 

என் கம்பீரம் குன்றி

சிற்றெறும்பாய் சிறுத்து.

 

எனை நானாய்

என் வீட்டிலேயே இருக்கவிடு..!

 

*சே.பிருந்தா*


No comments:

Post a Comment