எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Tuesday, 19 January 2021

படித்ததில் பிடித்தவை (“தண்ணீர் லாரி” – தேவதேவன் கவிதை)

 

*தண்ணீர் லாரி*  

 

தெருக் குழாய்கள் இல்லாத

நகர் நோக்கி பசி போக்கத்

தாயாக ஓடிவரும்

நகராட்சித் தண்ணீர் லாரி.

 

பன்றிக் குட்டிகளாய் மொய்த்து

முலை நோக்கி மோதுங் குடங்கள்

தமக்குள்ளே இடித்துக்கொள்ளும்

ஆபாசமாய்க் கத்தும். கூச்சலிடும்.

 

எங்கே அந்த பரிசுத்த அமைதி

எனத் தேடினால்

ஒரு நிழலோரம் லாரி டிரைவர்

பீடி புகைத்துக் கொணடிருப்பான்..!

 

*தேவதேவன்*


No comments:

Post a Comment