*ஐந்தாம் வகுப்பு - C (இட ஒதுக்கீடு)*
எட்டு
மணிக்குத் துவங்கும்
பள்ளிக்கூடத்துக்கு
ஆறுமணிக்கே
பெருக்கத் துவங்குவா
முருகாயி
ஆச்சி.
மத்த
இடத்த விட
ஐந்தாம் வகுப்பு C க்கு
அதிகம்
ஈடுபாடு காட்டுவா.
பாத்து
பாத்து வளத்த மவன்
சாராயத்துக்கு
விருந்தாக…
மண்ணெண்ணெய்
மேல அங்க இங்க ஊத்தி
எரிஞ்சி போன
மருமவளும்…
பத்துவயசுல
விட்டுப்போன
பொறவு
கடன்
வாங்கி
தான்
வேல செய்யுற
இடத்திலேயே
தலம
ஆசிரியர் காலத்தொட்டு
வாங்குன
ஐஞ்சாப்பு
C ல
அப்பப்ப
வேலைக்கு நடுவுல
பேரனக்
கண்டு
ரசிப்பா
நெஞ்சு
நனைய.
வாத்தியார
எதுத்து பேசுனான்னு
தலம
ஆசிரியர் சொல்ல
வெளக்கமாத்தால
வீசுனா பேரன.
‘அப்பன் புத்தியா…
ஆத்தா
புத்தியா…
ஏண்டா
அப்படி செஞ்சேன்னு..?’
தலையிலடிச்சு
அழும் ஆத்தாவக்
கேக்குறான்
பேரன்
‘ஏன் ஆத்தா,
நா
கக்கூஸ கழுவத்தான் பொறந்தேன்னு
வாத்தியார்
சொன்னது
உண்மையான்னு..!’
*வீ.கதிரவன்*
அருமை.
ReplyDeleteஅருமை
ReplyDeleteபிஞ்சு நெஞ்சில்
ReplyDeleteதாழ்வு மனப்பான்மையை
விதைக்கும் ஆசிரியர்கள்
கல்வித்துறையின் அவமானங்கள்.
அவர்கள் கொலைகாரர்களுக்கு
சமம்.
கவிஞருக்கு பாராட்டுகள்.
ReplyDeleteமிக அருமை.
கவிதை மிக அருமை.
ReplyDeleteகவிதை அருமை.
ReplyDeleteSuper.
ReplyDelete