எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Tuesday, 22 February 2022

படித்ததில் பிடித்தவை (“இன்னும் கொஞ்சம்..!” – செல்வராஜ் ஜெகதீசன் கவிதை)

 


*இன்னும் கொஞ்சம்..!*

              

இன்னும் கொஞ்சம்

அன்போடு

இருந்திருக்கலாம்

இவள்.

 

இன்னும் கொஞ்சம்

இயல்போடு

இருந்திருக்கலாம்

இந்த உறவுகள்.

 

இன்னும் கொஞ்சம்

இசைவாய்

இருந்திருக்கலாம்

இந்த நண்பர்கள்.

 

இன்னும் கொஞ்சம்

இலவம்பஞ்சாய்

இருந்திருக்கலாம்

இந்த மனசு.

 

இதுபோல் இன்னும்

இன்னும் கொஞ்சங்களில்

இந்த வாழ்வு..!”

 

*செல்வராஜ் ஜெகதீசன்*



5 comments:

  1. #ஆசிரியர் குறிப்பு#

    *செல்வராஜ் ஜெகதீசன்*
    1969 ஆம் ஆண்டு
    சென்னையில் பிறந்தார்.
    தற்சமயம் பணிநிமித்தம்
    (மின்பொறியாளர்)
    அபுதாபியில்
    (ஐக்கிய அரபு குடியரசு)
    வசித்து வருகிறார்.

    ReplyDelete
  2. சீனிவாசன்22 February 2022 at 13:13

    கவிதை மிகவும் அருமை.

    ReplyDelete
  3. ஸ்ரீராம்22 February 2022 at 13:14

    மிக உண்மை.
    கவிதை மிக அருமை.

    ReplyDelete
  4. செல்லதுரை22 February 2022 at 13:59

    கவிதை அருமை.

    ReplyDelete
  5. லதா இளங்கோ26 February 2022 at 08:04

    அன்பை தெரிவிக்கிறது
    இக்கவிதை.

    ReplyDelete