*இக்கணத்தின் கவிதை*
“என் பேனா எழுதத் தவறிய
அந்த ஒரு வரியை
யோசித்துக் கொண்டிருந்ததில்
ஒரு மணி நேரம் வீணானததுதான் மிச்சம்.
அதனால் என்ன..?
அந்த வரி எனக்குள் உயிருடன் இருக்கிறது
முணுமுணுத்தவாறே…
அதுதான் இக்கணத்தின் கவிதை..!”
*கார்லோஸ் ஆண்ட்ரேட்*
No comments:
Post a Comment