*அப்பா*
“எப்பொழுதும் போலவே
இந்தக்
கோடையிலும்
எனக்காகக்
காத்திருக்கும்
எல்லாமும்
இருக்கின்றன
என்
பிறந்த ஊரில்...
ஒரு
மாலை நேரத்து மாரடைப்பில்
பாராமல்
எனைப் பிரிந்த
என்
அப்பாவைத் தவிர..!”
*தமிழச்சி தங்கப்பாண்டியன்*
{‘எஞ்சோட்டுப் பெண்’ தொகுப்பிலிருந்து}
#ஆசிரியர் குறிப்பு#
ReplyDelete*தமிழச்சி தங்கப்பாண்டியன்*
தமிழச்சி தங்கப்பாண்டியன்
(பிறப்பு: 25 சூலை 1962) என்பவர்
தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண்
கவிஞரும், சமூக ஆர்வலரும்
மற்றும் அரசியல்வாதியும் ஆவார்.
*பிறப்பு*
இவர் விருதுநகர் மாவட்டம்,
மல்லாங்கிணறு என்னும்
சிற்றூரில் பிறந்தவர்.
இவரது இயற்பெயர் சுமதி ஆகும்.
இவர் தமிழகத்தின் முன்னாள்
வணிகவரித்துறை அமைச்சரான
வி. தங்கப்பாண்டியனின் மகளும்,
தமிழக தொழிற்துறை,
தமிழ் வளர்ச்சி மற்றும்
தொல்லியல்துறை அமைச்சர்
தங்கம் தென்னரசின் அக்காவும்
ஆவார்.
*கல்வி*
சுமதி தான் பிறந்த
மல்லாங்கிணற்றில் தொடக்கக்
கல்வியும் விருதுநகரில்
உயர்நிலைப் பள்ளிக் கல்வியும்
பெற்றார். மதுரையில் உள்ள
மீனாட்சி அரசினர் பெண்கள்
கல்லூரியில் பயின்று புதுமுக
வகுப்பில் தேறினார். பின்னர்
மதுரை தியாகராயர் கல்லூரி
கல்லூரியில் ஆங்கில இலக்கியம்
பயின்று இளங்கலை, முதுகலைப்
பட்டங்களைப் பெற்றார்.
ஆஸ்திரேலியாவில் வாழும்
இலங்கை புலம்பெயர்
தமிழர்களின் ஆங்கில
படைப்பிலக்கிய வெளிப்பாடுகள்
என்னும் தலைப்பில்
ஆய்வுசெய்து முனைவர் பட்டம்
பெற்றார்.
*பணி*
சென்னை ராணி மேரிக்
கல்லூரியில் ஆங்கிலப்
பேராசிரியையாகப் பணியாற்றி
விருப்ப ஓய்வு பெற்றுள்ளார்.
*குடும்பம்*
தமிழச்சி என்னும் சுமதி,
காவல்துறை அதிகாரி
சந்திரசேகர் என்பவரைத்
திருமணம் செய்துள்ளார்.
இவர்களுக்கு இருமகள்கள்
உள்ளனர்.
*அரசியல்*
தமிழச்சி திராவிட முன்னேற்றக்
கழகத்தில் தன்னை இணைத்துக்
கொண்டு தற்போது திமுகவின்
பாராளுமன்ற உறுப்பினராக
பதவி வகித்து வருகிறார்.
இவரது தொகுப்புகள் விகடன்
இதழில் வெளிவந்துள்ளன.
இளவயதில் பரதநாட்டியம்
கற்றவர். 2019 இந்திய
நாடாளுமன்றத் தேர்தலில்,
தென்சென்னை தொகுதியில்
திமுக வேட்பாளராக போட்டியிட்டு,
அமைச்சர் ஜெயக்குமாரின்
மகனான ஜெ. ஜெயவர்தனை
2,62,223 வாக்குகள்
வித்தியாசத்தில்
வெற்றிபெற்றார்.
*கவிதைகள் தொகுப்புகள் *
எஞ்சோட்டுப் பெண்
(சனவரி 2004)
வனப்பேச்சி (திசம்பர் 2007)
மஞ்சணத்தி (திசம்பர் 2009)
அருகன் (திசம்பர் 2011)
அவளுக்கு வெயில் என்று பெயர்
(திசம்பர் 2015)
*கட்டுரை தொகுப்புகள்*
பாம்படம் (திசம்பர் 2010)
சொல் தொடும் தூரம்
(திசம்பர் 2010)
மயிலறகு மனசு (மே 2012)
மண்வாசம் (ஜூலை 2013)
நவீனத்துவவாதி கம்பன்
(திசம்பர் 2010)
உறவுகள் - எஸ்.பொ.
(திசம்பர் 2004)
பூனைகள் சொர்க்கத்திற்குச்
செல்வதில்லை (திசம்பர் 2015)
சொட்டாங்கல் (திசம்பர் 2018)
*ஆராய்ச்சி தொகுப்புகள்*
நிழல் வெளி (சனவரி 2018)
*சிறுகதை நூல்*
முட்டு வீடு (சனவரி 2019)
*ஆங்கில நூல்கள்*
Island to Island (The Voice of
Sri Lankan Australian
Playwright-Ernest Thalayasingham
Macintyre) (Jan 2013)
Internal Colloquies, translated by
C.T.Indra of selected poems from
Vanapechi by Dr.Thamizhachi
Thangapandian (Feb 2019)
*விமர்சன நூல்கள்*
காலமும் கவிதையும் -
தமிழச்சியின் படைப்புலகம்
(திசம்பர் 2010)
காற்று கொணர்ந்த கடிதங்கள்
(திசம்பர் 2010)
*நேர்காணல் – தொகுப்பு*
பேச்சரவம் கேட்டிலையோ
(சனவரி 2009)
கவிதை அருமை.
ReplyDeleteகவிதை மிக அருமை.
ReplyDeleteபாராட்டுகள் கவிஞருக்கு.
கவிதை அருமை.
ReplyDeleteஅப்பாவின் இடம்
ReplyDeleteஎவராலும் நிரப்ப இயலாதது!
அப்பா அப்பாதான்!
அப்பா
ReplyDeleteஒரு பெண்ணிற்கு
எப்போதும் Hero.
தமிழச்சி பாண்டியனின்
இக் கவிதை
அப்பா இல்லாததன்
வலியைக் கூறி
நெகிழ வைக்கிறது.
விழியோரம் நீர்
ReplyDeleteஎட்டிப் பார்க்க வைக்கும்
கவிதை.
கவிஞர் தமிழச்சி
தங்கபாண்டியனுக்கு
வாழ்த்துகளும்
பகிர்ந்தமைக்கு
நன்றியும் தோழர்.
கவிதை அருமை.
ReplyDelete