*வாடகை வீடு*
“ஆணி அடித்த ஒரு சந்தர்ப்பத்தில்
சொல்லால்
அறைந்து
அவ்வாணியிலேயே
தொங்க
விட்டுச்செல்கிறாய்
என்னை..!
கொஞ்சம்
வேகமாக
பாதம் பதித்தால்
விரிசல்
காண்பதாய்
வாதம்
செய்ய ஓடோடி
வருகிறாய்..!
உன்
செல்ல பிள்ளை
பிசாசுகளின்
காட்டுக்
கத்தலில்
கழிக்கப்படுகின்றன
என்
அமைதி..!
மொட்டை
மாடிக்கான
வழியைக்
கூட
உன் வீட்டுக்குள்தான்
ஒளித்து
வைத்திருக்கிறாய்..!
யோசித்துப்
பார்த்தால்,
வாடகை
மட்டுமல்ல
என்
சுதந்திரத்தின்
பெரும்
பகுதியை
அடகு
வைத்துத்தான்
குடிபுகுந்திருக்கிறேன்..!
எலி
வங்குக்கு ஒப்பான
உன்
வீட்டில்..!”
*ப்ரியன்*
கவிஞருக்கு பாராட்டுகள்.
ReplyDeleteவாடகைதாரர்களின்
ReplyDeleteவர்ணிக்க முடியாத
அவஸ்தைகளை
அற்புதமாக வடித்த
கவிதை.
மிக நன்று!
கவிஞருக்கு பாராட்டுகள்.
ReplyDeleteகவிதை மிக அருமை.
ReplyDeleteநல்ல கவிதை. படிக்கும்போதே மூச்சு முட்டுகிறது.
ReplyDeleteகவிதை மிக அருமை.
ReplyDeleteSuper.
ReplyDelete