*‘1001’ காரணங்கள்*
“முட்டக்
குடித்து
தன்னிலை
மறந்து தூங்க
ஆயிரம்
காரணங்கள் இருப்பதாக
சொன்னவனிடம்
ஒரே
ஒரு காரணம் மட்டும்
சொல்லும்படி
கேட்டவளிடம்
சொன்ன
காரணத்தை
இதெல்லாம்
ஒரு காரணமா..?
என்றவளையும்
சேர்த்து
இப்ப
இவனிடம்
ஆயிரத்தொரு
காரணங்கள் இருந்தது..!”
*ராஜாராம்*
மிக அருமை.
ReplyDeleteஅருமை.
ReplyDeleteமிக நன்று.
ReplyDelete