*கடைசி பென்ஞ்சில் உட்கார்ந்தவன்*
“கொஞ்சம் உயரமானவன்
மூச்சு
விடாமல் பேசுவான்
சந்தேகம்
எழுப்புவான்
கேள்வி
கேட்பான்
பதில்
சொல்லமாட்டான்
பெண்பிள்ளைகள்
சீண்டுவான்
கவிதை
எழுதுவான்
திரைப்பாட்டு
படிப்பான்
சட்டையில்
மை தெளிப்பான்
சண்டையில்
சட்டை கிழிப்பான்
கரும்பலகையில்
பேசியவர் பட்டியலில்
முதல்
பெயர் பிடிப்பான்
தேர்வறையில்
தூங்குவான்
தேர்ந்த
கதை சொல்வான்
திணறி
திணறி வாசிப்பான்
தெரியாத
ஆங்கிலம் முயற்சிப்பான்
இப்படி
அவனைப் பற்றிய
உங்கள்
அனுமானங்களை
பின்பு
ஒருநாள்
உங்கள்
ஓய்வு காலத்தில்
கடைத்தெருவில்
கண்டால்
ஒளிந்தோடுவோர்
மத்தியில்
கைகுலுக்கி
கைக்கூடை வாங்கி
வீடு
வரை வந்து பொய்யாக்குவான்
அவனைத்தான்
நீங்கள்
வகுப்பில்
கடைசி பென்ஞ்சில்
உட்கார
வைத்திருந்தீர்..!”
*மு. மகுடீசுவரன்*
#ஆசிரியர் குறிப்பு#
ReplyDelete*மு.மகுடீசுவரன்*
ஆண் கவிஞர்.
பிறந்த நாள் : 27.11.1981.
சொந்த ஊர் : ஒட்டன்சத்திரம்.
தற்போது வசிப்பது :
உடுமலைப்பேட்டை.
பள்ளிப் படிப்பு :
விவேகானந்தா வித்யாலயா,
பழனி (1997).
கல்லூரி : விவேகானந்தா
கல்லூரி, சோளவந்தான்,
மதுரை (2002).
வேலை : ஆசிரியராக
பள்ளபாளையம், PUM
பள்ளியில் பணிபுரிகிறார்.
கவிதை அருமை.
ReplyDeleteமிக அருமை.
ReplyDeleteஎன்னுடைய பள்ளி
கடைசி பென்ஞ்
நண்பர்கள் சிலர்
கவிஞர் கூறியது போல
இன்றளவும் நட்பை மேன்மையாக
பேணிக்கொண்டிருக்கிறார்கள்.
கவிதை மிக அருமை.
ReplyDeleteஅந்த கால நினைவுகள்
மிக அருமை.
கவிதை மிக அருமை.
ReplyDeleteகவிஞருக்கு பாராட்டுகள்.
கவிதை அருமை.
ReplyDeleteநன்று.
ReplyDelete