*உலகம்*
“டயானா மரணமும்
கிளிண்டன்
காதல் லீலைகளும்
பஞ்சாயத்து
தொலைக்காட்சியில்
பார்த்தபின்
விவாதமாயிற்று
டீக்கடை
பெஞ்சுகளில்…
முதிர்ந்த
கரும்பு காய்ந்து கருக
ஆலை
திறக்குமா..?
நிலுவை
கிடைக்குமா..?
இருள்
சூழ் மர்மமாயிற்று.
வீட்டுக்கொரு
தொலைக்காட்சிப் பெட்டி
லட்சியமானபோது
மருங்கூருக்குள்
வந்துவிட்டது உலகம்.
உலகத்துக்குத்தான்
கவலையில்லை
மருங்கூர்
பற்றி..!”
*கரிகாலன்*
அருமை
ReplyDeleteஉலகம் கைக்குள் வந்து விட்டது.
கைதான் வறண்டு காய்ந்துள்ளது
உணர நேரமில்லை உலகுக்கு.
அருமை உண்மை
ReplyDeleteகவிதை மிக அருமை.
ReplyDeleteபாராட்டுகள் கவிஞருக்கு.
கவிதை அருமை.
ReplyDeleteஇது 100 சதம் உண்மைதான்.
ReplyDeleteகவிதை அருமை.
ReplyDeleteகவிதை மிக அருமை.
ReplyDelete