எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Wednesday, 16 February 2022

படித்ததில் பிடித்தவை (“வயிறு” – செல்வராஜ் ஜெகதீசன் கவிதை)

 


*வயிறு*

              

இரவு கண்விழிக்கும்

இளங்காலைப் பொழுதொன்றில்

ஒல்லி தேகத்தின்

ஒட்டிய வயிறோடு

சாலையோரக் கால்வாயை

சுத்தப்படுத்திக்கொண்டிருந்த

சிலரோடு

கார்களைக் கழுவிக்கொண்டிருந்த

ஒருவனையும்

பார்த்தபடி

போய்க்கொண்டிருந்தேன் - அந்த

பூங்காவைச் சுற்றி

பெருத்த வயிற்றின்

சுற்றளவில் - ஒரு

இன்ச்சாவது குறைத்துவிடும்

உறுதியோடு..!”

 

*செல்வராஜ் ஜெகதீசன்*



6 comments:

  1. #ஆசிரியர் குறிப்பு#

    *செல்வராஜ் ஜெகதீசன்*
    1969 ஆம் ஆண்டு
    சென்னையில் பிறந்தார்.
    தற்சமயம் பணிநிமித்தம்
    (மின்பொறியாளர்)
    அபுதாபியில்
    (ஐக்கிய அரபு குடியரசு)
    வசித்து வருகிறார்.

    ReplyDelete
  2. சத்தியன்16 February 2022 at 09:10

    அருமை.

    ReplyDelete
  3. செல்லதுரை16 February 2022 at 11:40

    கவிதை அருமை.

    ReplyDelete
  4. ஸ்ரீராம்16 February 2022 at 11:40

    ஏற்ற தாழ்வுகள்
    மனிதனின் ஜாதி என்ற
    கவிஞர் கண்ணதாசனின்
    பாடல் வரிகளை
    நினைவில் கொண்டு வரும்
    கவிதை.

    ReplyDelete
  5. ஸ்ரீகாந்தன்16 February 2022 at 18:42

    கவிதை அருமை.

    ReplyDelete
  6. 'இரவு கண் அயரும்'
    என்பதே சரி.

    ஏற்ற தாழ்வுக்கான
    குறியீடாக வயிறு
    மட்டுமல்ல,
    இரவு பகலும்
    இருக்கிறது கவிதையில்.

    ReplyDelete