எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Monday, 17 January 2022

படித்ததில் பிடித்தவை (“எம்.ஜி.ஆர்.” – வாலி கவிதை)

 


*எம்.ஜி.ஆர்.*

 

நீ

இந்தியாவில் பிறந்து

இலங்கைக்கு சென்ற

இராமச்சந்திரனல்ல

இலங்கையில் பிறந்து

இந்தியா வந்த

இராமச்சந்திரன்..!

 

அந்த இராமச்சந்திரன்

சூரிய குலத்தில் வந்தவன்.

நீயும்

உதய சூரியனின்

வழித்தோன்றல்தான்.

 

அவனும்

ஜானகி மணாளன்.

நீயும்

ஜானகி மணாளன்.

 

அவனும்

பதவி ஆசை பிடித்தவர்களால்

வெளியேற்றப்பட்டான்.

நீயும் அப்படியே.

 

அவனும்

நாடோடியாகத் திரிந்து

மன்னனானான்.

நீயும்

நாடோடி மன்னன்தான்.

 

அவனிடத்தில்

இருந்தது போலவே

உன்னிடத்தில்லும்

வில் பவர் இருந்தது.

 

அந்த இராமச்சந்திரன்

தெய்வமாக இருந்து

மனிதனாக மாறியவன்.

நீ

மனிதனாக இருந்து

தெய்வமாக மாறியவன்.

இதனால்தான் உன்னை

இதய தெய்வம் என்கிறோம்.

 

ஆனால் ஒன்று

அவன்

வாலியை

அம்பு கொண்டு வீழ்த்தியவன்.

நீயோ

வாலியை

அன்பு கொண்டு வாழ்த்தியவன்..!

 

 

*வாலி*


6 comments:

  1. சத்தியன்17 January 2022 at 20:54

    கவிஞர் வாலிக்கு
    பாராட்டுகள்.
    நன்று.

    ReplyDelete
  2. செளந்தரராஜன்17 January 2022 at 20:55

    கவிதை அருமை.

    ReplyDelete
  3. வெங்கட்ராமன், ஆம்பூர்17 January 2022 at 20:56

    கவிதை மிக நன்று.
    வாழ்த்துகளும்,
    பாராட்டுகளும்
    கவிஞர் வாலிக்கு!

    ReplyDelete
  4. ஜெயராமன்17 January 2022 at 21:30

    கவிதை மிக அருமை.

    ReplyDelete
  5. ஸ்ரீராம்17 January 2022 at 21:30

    மிக அருமை.

    ReplyDelete