*திறப்பதும்… மூடுவதும்*
“மகள் வயதில் நின்ற
நான்கு பூவரச மரங்கள்
அவளின் திருமணச் செலவிற்காக
வெட்டப்பட்டபோது
வீடே
ஒருவித நிசப்தத்தில்
மூழ்கியது.
அன்றுமட்டும்
பூவரசமரங்கள் வெட்டப்படவில்லையென்றால்
அவளது திருமணம்
நடந்திருக்காது.
இன்று அந்தப் பூவரசமரம்
யாரோ ஒருவர் வீட்டில்
நிலைக்கதவாகவோ
சன்னலாகவோ நிச்சயமிருக்கும்.
ஒருபெண்
திறப்பாள்…
மூடுவாள்..!”
*அ. ஈஸ்டர் ராஜ்*
கவிதை மிகவும் அருமை.
ReplyDeleteகவிதை மிக அருமை.
ReplyDeleteவாழ்த்துகள்.
கவிதை அருமை.
ReplyDeleteகவிஞருக்கு பாராட்டுகள்.
ReplyDeleteகவிதை மிகவும் அருமை.