*அழைப்பு*
“அறிந்திராத
புதிய
எண்ணின் அழைப்பு
அலைபேசியின்
அந்தப்புறம்
மிகப்பழகிய
மௌனம்
‘நல்லாருக்கியா?’ என்கிறேன்
‘ம்ம்ம்’ என்று அழைப்பினைத் துண்டிக்கிறாள்.
அவளுக்கு
ஏதோ சொல்ல வேண்டியிருந்தது,
எனக்கு
கேட்க வேண்டியிருந்தது,
காலத்திற்கு
தவிர்க்கவேண்டி..!”
*யாத்திரி*
கவிதை மிக அருமை.
ReplyDeleteஇக் கவிதையை
ReplyDeleteஉரிமை எடுத்துக் கொண்டு
சற்றே மாற்ற முனைந்தேன்.
பொறுத்துக் கொள்க.
*இழந்த காதல்*
“அறிந்திராத
புதிய எண்ணின் அழைப்பு
அலைபேசியை
எடுத்தவுடன்
மிகப்பழகிய மௌனம்
‘நல்லாருக்கியா?’
என்கிறேன்
‘ம்ம்ம்’ என்ற
ஒற்றைச் சொல்லோடு
அழைப்பினைத் துண்டிக்கின்றாள்.
அவளுக்கு ஏதோ
சொல்ல வேண்டியிருந்தது,
எனக்கு ஏதோ
கேட்க வேண்டியிருந்தது,
இது
இழந்த காதலின் மிச்சம்.
கவிதை
ReplyDeleteஅருமையான பதிவு.
வாழ்த்துக்கள்.